சந்தை குறித்து இளம்தலைமுறையினருக்குக் கற்றுத் தந்து பிறருக்குத் தருவதில் உள்ள மகிழ்ச்சியைப் புரிய வைப்பதற்கான முயற்சியை மேற்கொண்டது நாகப்பட்டினத்தில் உள்ள சர் ஐசக் நியூட்டன் கல்விக் குழுமங்கள்.
2019-20-இல் நாகப்பட்டினத்தில் தொடக்கப்பட்ட இந்தக் கல்விக் குழுமப் பள்ளிகளில் சுமார் 1,000 மாணவர்கள் பயில்கின்றனர். இதில், எல்.கே.ஜி. முதல் 3-ஆம் வகுப்பு வரையுள்ள சுமார் 150 மாணவ, மாணவியரில் 75 பேரைத் தேர்வு செய்து பொங்கல் சந்தையை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக பள்ளி நிர்வாகத் தரப்பில் நிதியும் ஒதுக்கப்பட்டது. தேன் மிட்டாய், கடலைமிட்டாய் உள்ளிட்ட தின்பண்டங்கள், சில கார வகைகள், பானகம், மோர் உள்ளிட்ட பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டன.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் சந்தையைப் பார்வையிட்டு பணம் கொடுத்துப் பொருள்களை வாங்கினர்.
லாபத் தொகையை வைத்து பக்கத்து ஊர் விவசாயிகள் 25 பேருக்கு போர்வை, வேட்டி, துண்டைக் கொடுத்து இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கினர். இதன் மூலம் மாணவர்களுக்குக் கொடுத்து மகிழ்ச்சி. விவசாயிகளுக்கோ தங்களை மதித்து அழைத்து புத்தாடை பெற்ற மகிழ்ச்சி.
இது தொடர்பாக நாகப்பட்டினம் சர் ஐசக் நியூட்டன் கல்விக் குழுமங்களின் தலைவர் டி.ஆனந்த், இயக்குநர் டி.சங்கர் ஆகியோர் கூறியதாவது:
""சந்தையில் இருப்பதைப் போன்று கடைகள் வைத்து வியாபாரம் எப்படி இருக்கும் என்பதைக் கற்றுத் தந்தோம்.
லாபத் தொகையை வடவூரைச் சேர்ந்த விவசாயிகள் 25 பேருக்கு போர்வை, வேட்டி, துண்டு ஆகியவற்றை வழங்கினோம். உலகுக்கு உணவைத் தரும் விவசாயிகளின் உழைப்புக்கு மரியாதை தர வேண்டும் என்பதை குழந்தைகளுக்குப் புரிய வைத்துள்ளோம்'' என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்

‘சிஎம் சார், 5 வருசத்துல என்ன பண்ணிருக்கீங்க?’ என கேட்டால்... ஸ்டாலின் விளக்கம்!
தவெக தலைவர் விஜய் இன்று எங்கு பிரசாரம் செய்கிறார்?

தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைப்பவர்களுக்கு நான் டேஞ்சர்! - முதல்வர் ஸ்டாலின்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


