தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

ஒருவருக்காக வங்கிக் கிளை!

இங்கிலாந்து  நாட்டில் ஒரே ஒரு வாடிக்கையாளருக்காகவே,  சில ஆண்டுகளாகச் சேவையை வங்கிக் கிளை  ஒன்று அளித்துவருகிறது.   84 வயதாகும்  பீட்டர் விஸ்பை என்பவர்தான் அந்த வாடிக்கையாளர். 

News image
Updated On :12 பிப்ரவரி 2023, 12:30 am

இங்கிலாந்து  நாட்டில் ஒரே ஒரு வாடிக்கையாளருக்காகவே,  சில ஆண்டுகளாகச் சேவையை வங்கிக் கிளை  ஒன்று அளித்துவருகிறது.   84 வயதாகும்  பீட்டர் விஸ்பை என்பவர்தான் அந்த வாடிக்கையாளர். 

லண்டன் நகரின் பெர்மோன்ட்சே  பகுதியில் டவர் பிரிட்ஜ் சாலையில் செயல்படும்  பர்க்லே வங்கியின் கிளையில்   வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு மாறிவிட்டதால்  யாருமே  வங்கிக்கு  வருவதில்லை.  உலகின் முதல் பத்து  பெரிய வங்கிகளில் இந்த வங்கியும் ஒன்று.  

டிஜிட்டல்  முறையை  அறியாத,  ஆண்டராய்ட் கைப்பேசியைப் பயன்படுத்திப் பழக்கம் இல்லாத பீட்டர் விஸ்பை மட்டுமே  பல தெருக்களைக் கடந்து வங்கியில் பணம் செலுத்த, எடுக்க  வந்து போய்க்  கொண்டிருந்தார்.  அவர் ஏடிஎம்  கூட பயன்படுத்துவதில்லை. இவருக்குச் சேவை வழங்கவே  வங்கிக் கிளை செயல்பட்டுவருகிறது.  

நிர்வாகச் செலவு  அதிகமாவதால், வங்கி நிர்வாகம் பீட்டர் விஸ்பையின்   வாரிசுகளிடம் பேச்சுவார்த்தை  நடத்தியது.

"பீட்டர் விஸ்பைக்கு   புதியதாக கைப்பேசி  வாங்கிக் கொடுத்து  டிஜிட்டல் முறையில்  பணம் போட எடுக்க, டெபிட் கார்டு  பயன்படுத்தச் சொல்லிக் கொடுங்கள்.  ஒரு வாடிக்கையாளருக்காக  ஒரு  கிளை அலுவலகத்தை செயல்படுத்த   வேண்டியுள்ளது. அதனால்  நிர்வாகச்   செலவு மிகவும் அதிகமாவதால்  இந்த  வங்கிக்  கிளையை  மூட  முடிவு எடுத்துள்ளோம். உங்கள் அனைவரது ஒத்துழைப்பு தேவை'  என்று புரிய வைத்தது.

இதற்கு பீட்டர் விஸ்பையின்  வாரிசுகள் ,  ""சரி. புதிய கைப்பேசியை வாங்கிக் கொடுத்து அதன் மூலம் இணைய வங்கி சேவையைப் பயன்படுத்த கற்றுக் கொடுக்கிறோம்.  நீங்கள்  வங்கிக் கிளையை  மூடிக் கொள்ளலாம்''  என்று உறுதியாகத் தெரிவித்தனர். இதன்பேரில்,   பர்க்லே வங்கி  தனது பெர்மோன்ட்சே பகுதி  கிளையை நிரந்தரமாக மூட  முடிவெடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.