லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஒவ்வொருவரையும் கேட்டுக் கொண்டு பயணிக்க முடியாது..!

ஒவ்வொருவரையும் கேட்டுக் கொண்டே நாம் பயணம் போவதென்றால்  ஊர் போய் சேர முடியாது'' என்று கவியரசு கண்ணதாசனிடம் மறைந்த முதல்வர் எம்ஜிஆர் கூறி நெகிழ்ந்த சம்பவம் உண்டு.

News image
Updated On :22 ஏப்ரல் 2023, 6:30 pm

"ஒவ்வொருவரையும் கேட்டுக் கொண்டே நாம் பயணம் போவதென்றால்  ஊர் போய் சேர முடியாது'' என்று கவியரசு கண்ணதாசனிடம் மறைந்த முதல்வர் எம்ஜிஆர் கூறி நெகிழ்ந்த சம்பவம் உண்டு. 1978-ஆம் ஆண்டில் கண்ணதாசனை ‘அரசவைக் கவிஞர்' என்ற பதவியில் அமர்த்துவதாக மறைந்த முதல்வர் எம்ஜிஆர் அறிவித்தார்.  இது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது.

ஏனெனில், அதிமுக ஆளும்கட்சியாக மாறிய பின்னரும்,  கண்ணதாசன் விமர்சித்தே வந்தார்.  மனதில் பட்டதைப் பேசுவதும்,  எழுதுவதுமே கவியரசுவின் வாடிக்கை. அவரது மனம் வெள்ளை மனம். எதையும் மூடி மறைத்து தன்னை களங்கப்படுத்திக் கொள்ள கண்ணதாசன் விரும்பவில்லை.

இந்த நிலையில்,  தன்னை விமர்சனம் செய்தவருக்கே பதவியை எம்ஜிஆர் அறிவித்தது அரசுத் துறை வட்டாரங்களில் மட்டுமன்றி, அரசியலும் ஓர் இன்ப அதிர்ச்சிதான்.  இந்த அறிவிப்பை அரசாணையாக வெளியிடுவதற்கு முன்னர், கண்ணதாசனிடம் எம்ஜிஆர் கூறும்போது, "உங்களுடைய தகுதிக்கு இது ஒன்றும் பெரிய பதவியல்ல. ஆனால் என்னுடைய அதிகார வரம்பில் நான் செய்யக் கூடிய மரியாதை இதுதான். நான் இதை அறிவிக்கப் போகிறேன். நீங்கள் இதை மறுத்துவிடக் கூடாது'' என்றார்.

இதற்கு கண்ணதாசனும், "நான் உங்களைப் புகழ்ந்ததாகவும், நீங்கள் அதற்கு விலை கொடுத்ததாகவும் ஊரார் பேசுவார்களே!'' என்றார்.

இதைக் கேட்டு சிரித்த எம்ஜிஆர், " ஒவ்வொருவரையும் கேட்டுக் கொண்டே நாம் பயணம் போவதென்றால் ஊர் போய் சேர முடியாது'' என்றார்.

பின்னர், கண்ணதாசன் மறுப்பு கூறாமல் அந்தப் பதவியை ஏற்றுக் கொண்டார். இந்த விஷயத்தை "கண்ணதாசன் பார்வையில் எம்ஜிஆர்' என்ற நூலில் கண்ணதாசனே எழுதியிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.