/

விஜய்சேதுபதி வசனத்தில் விமல்

எம் .ஐ.கே. புரொடக்ஷன்ஸ் பிரைவேட்  லிமிடெட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் "குலசாமி'.

News image
Updated On :22 ஏப்ரல் 2023, 6:30 pm

எம் .ஐ.கே. புரொடக்ஷன்ஸ் பிரைவேட்  லிமிடெட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் "குலசாமி'. கதாநாயகனாக விமல் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தான்யா ஹோப் நடிக்கிறார். போஸ் வெங்கட்,  முன்னாள் போலீஸ் அதிகாரி ஜாங்கிட் , வினோதினி, மகாநதி சங்கர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 

விஜய்சேதுபதி வசனம் எழுதியுள்ள இப்படத்தை சரவண சக்தி எழுதி இயக்கியுள்ளார். விஜய்சேதுபதி இதற்கு முன் ஆரஞ்சு மிட்டாய் படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.  படம் குறித்து இயக்குநர் பேசும் போது... ""ஒரு குற்றமும், அந்தக் குற்றத்ûச் செய்ய தூண்டக் கூடிய அம்சங்களும்தான் இதன் ஆதாரம். ஒரு குற்றத்தின் மூலம் எங்கே ஆரம்பிக்கிறது. அது அந்த மனிதனை எங்கே நிறுத்துகிறது. 

அதன் விளைவுகள் என்ன என்பதுதான் இதன் பேசு பொருள். அதை ஒரு கமர்ஷியல் சினிமாவுக்கான அம்சங்களுக்கு உட்பட்டு, செய்து முடித்திருக்கிறேன்.  அறிந்தும் அறியாமலும் அவ்வப்போது செய்கிற தவறுகள்தான் வாழ்க்கையின் திசைகளைத் தீர்மானிக்கும். அது நல்லதோ கெட்டதோ... சில நிமிடங்கள், சில விநாடிகளில் நாம் அதுவரைக்கும் வடிவமைத்து வைத்த மொத்த வாழ்க்கைப் போக்கும் மாறி விடும். அப்படித்தான் இங்கே ஒரு சூழல். தங்கைக்காக போராடும் ஒரு அண்ணன் என்கிற போக்கில் கதை போகும். 

தமிழ்நாட்டிலேயே நம்பர் ஒன் இடத்தைப் பிடித்த பெண்ணை ஒரு ஊரே சேர்ந்து படிக்க வைக்கிறது. படிக்கப் போன இடத்தில் அந்த பெண்ணுக்கு பிரச்னை. அந்த பிரச்னையை சரிவர கையாண்டு தங்கையை காப்பாறினாரா.... ஊரின் கனவை கரை சேர்த்தாரா என்பது பரபர திரைக்கதை.  அதை எப்படி அவரால் முடிக்க முடிந்தது என்பதுதான் கதையின் லைன். அதற்காக அவர் கடந்து வந்த தூரம், கொடுத்த  விலை என கதை போகும்.  எல்லா மனித சிக்கல்களிலும் காதல் எப்படி ஒரு பங்கு வகிக்கிறதோ, அப்படி இந்த கதை ஓட்டத்திலும், மையப் புள்ளியிலும் ஒரு காதல் உண்டு'' என்றார் இயக்குநர். தற்போது திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.