மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

தமிழ்க்குடிமகன்

லட்சுமி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "தமிழ்க்குடிமகன்'. சேரன் கதாநாயகனாக நடிக்கிறார்.

News image
Updated On :18 செப்டம்பர் 2022, 10:57 am

லட்சுமி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "தமிழ்க்குடிமகன்'. சேரன் கதாநாயகனாக நடிக்கிறார்.   எஸ். ஏ. சந்திரசேகர், துருவா, ஸ்ரீ பிரியங்கா, தீப்ஷிகா, வேல ராமமூர்த்தி, ரவி மரியா, மு. ராமசாமி, அருள் தாஸ், மதுரையை சேர்ந்த பிரபல நாடக நடிகர் எம். கே. ஆர். உள்ளிட்டோர் கதையின் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.  இந்த படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைக்கிறார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்கிறார். இசக்கி கார்வண்ணன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார்.  

படம் குறித்து இயக்குநர் பேசும் போது... 

""படத்தின் தலைப்பிற்கு ஏற்றார் போல, இது ஒரு மனிதனின் குடியுரிமையை பற்றிய படம்.  ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகள் குறித்தும் சமுதாய சமநிலை குறித்தும் இப்படம் பேசுவதோடு மட்டுமில்லாமல் ஆக்கப்பூர்வமான விவாதங்களையும் உருவாக்கும். மனித மனம் காட்டை மறந்து, வீட்டின் சூழலுக்குப் பழக்கப்பட்ட மிருகம் போல எப்போதும் ஒரு நிர்பந்தத்துக்குக் கட்டுப்பட்டது. மிருகம் மிருகமாக இருக்க இயலாமல் தடுப்பது மிருகத்தின் கோணத்தில் பெருந்துக்கம்.  எங்கேயாவது ஒரு மரத்தடியில் அமர்ந்து , உள் இழுத்து முழுவதுமாக புதைந்து போயிருந்த நினைவுகளை எல்லாம் தூர்வாரி வெளியே இழுத்துப்போட்டால் எப்படி இருக்கும். அப்படி ஒரு தாக்கத்தில் எழுந்த உணர்வுதான் படம். பரவசம் கொடுக்கும் பயணம், எளியவர்களின் எதிர்பார்ப்பு இல்லாத பிரியம்... இப்படித்தான் இருக்கும் இது'' என்றார் இயக்குநர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.