கி.மு. 336-331-ஆம் ஆண்டு காலத்தில் பாரசீகத்தை ஆண்டு வந்த அரசின் பெயர் டேனியல். இந்த நாட்டின் மீது கிரேக்க சக்கரவர்த்தி அலெக்சாந்தர் படையெடுக்க முடிவு செய்ததை அறிந்தார் டேனியல். இதையடுத்து, அலெக்சாந்தருக்கு டேனியல் அனுப்பிய கடிதத்தில், இத்துடன் ஒரு பெட்டியில் தங்கம், எள் மூட்டை, பந்து, சாட்டை ஆகியவற்றை அனுப்பியுள்ளேன். தங்கத்தின் நிலை எனது படைபலத்தைக் குறிக்கும். சாட்டையானது எனது அதிகாரப் பலத்தை பறைசாற்றும். நீ விளையாட்டுப் பிள்ளையாக இருக்கிறாய். அதற்காகப் பந்து' என கூறப்பட்டிருந்தது. அலெக்சாந்தர் இதற்குப் பதில் தெரிவித்து அனுப்பிய கடிதம்:
""நீ அனுப்பியவைகள் கிடைத்தன. தங்கம்- விரைவில் உன் கருவூலம் என்னிடம் வரப் போவதை அறிவித்துவிட்டன. எள் மூட்டையோ உன் படைபலம் என்ன என்பதையும், உண்மையில் எள்போல ஊதி விடலாம் என்பதையும் உணர்த்திவிட்டன. உனது சாட்டை உன்னையே தண்டிக்க உதவப் போகிறது. பந்து போன்ற இந்தப் பூமி என் வசம் விரைவில் வரப் போகிறது.
உனக்கு இன்று ஒரு பை நிறைய கடுகை அனுப்பியுள்ளேன். எவ்வளவு கசப்பானது என்பதை உணர்வாய். என் வெற்றி உனக்கு அவ்வளவு கசப்பைத் தரும் என்பதை நீயே அறிந்துக் கொள்'' என்று கூறப்பட்டிருந்தது. இறுதியில் இரு நாட்டுப் படைகளும் கி.மு. 331-இல் இன்னன் என்ற இடத்தில் மோதின. பாரசீகப் படை தோற்று, அரசர் டேனியல் தப்பி ஓடினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி

மேற்கு வங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 89.93% வாக்குப்பதிவு- நேரலை

ஐபிஎல், பிபிஎல், பிஎஸ்எல் டி20 தொடர்களில் சதம் அடித்த ஒரே வீரராக ஸ்டீவ் ஸ்மித் சாதனை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


