இளம் நடிகர் அமிதாஷ் பரம்பொருள் எனும் பரபரப்பான கிரைம் டிராமா படத்திற்காக நடிகர் சரத்குமாரோடு இணைந்துள்ளார். கவி கிரியேஷன்ஸின் முதல் தயாரிப்பான இந்தப் படத்தை இயக்குநர் ராமிடம் உதவியாளர் அரவிந்த் ராஜ் எழுதி இயக்குகிறார். சிலைக்கடத்தல் குற்றங்களின் பின்னணியில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
குடும்பச் சூழலில் சிக்கித் தவிக்கும் இளைஞனாக அமிதாஷும், மாறுபட்ட காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் சரத்குமாரும் இணைந்து நடித்துள்ள இப்படத்தில், கதாநாயகியாக காஷ்மீரா பர்தேசி இடம்பெற்றுள்ளார். பாலாஜி சக்திவேல், சார்லஸ் வினோத், ப சிவா, வின்சென்ட் அசோகன், கஜராஜ், பாலகிருஷ்ணன், பவா செல்லதுரை உள்ளிட்டோர் முக்கிய வேடங்களை ஏற்கின்றனர். யுவன் ஷங்கர்ராஜா இசையில் படத்தில் நடிக்கும் அமிதாஷ் பாடகராக உருவெடுத்துள்ளார்.
பிரபல பின்னணி பாடகர் ஷங்கர் மகாதேவன் உடன் இணைந்து அமிதாஷ் பாடியுள்ள "சிப்பர ரிப்பர' என்ற துள்ளலான பாடல் வெளியாகியுள்ளது. "ரிச்சி' படத்தின் மூலம் பாராட்டுகளை பெற்ற ஒளிப்பதிவாளர் பாண்டிகுமார் இப்படத்திற்கான ஒளிப்பதிவை மேற்கொள்ள, டான், சாணிக் காகிதம், ராக்கி, எட்டு தோட்டாக்கள் படங்கள் மூலம் கவனத்தை ஈர்த்துள்ள நாகூரான் இப்படத்தை எடிட் செய்துள்ளார்.
கலை இயக்குநராக குமார் கங்கப்பன், சண்டைக்காட்சி பயிற்சியாளராக தினேஷ் சுப்பராயன், நடன இயக்குநராக சதீஷ் கிருஷ்ணன், ஆடை வடிவமைப்பாளராக பூர்ணிமா ராமசாமி இப்படத்தில் பணியாற்றியுள்ளனர். கவி கிரியேஷன்ஸ் நிறுவனத்திற்காக மனோஜ் மற்றும் கிரீஷ் தயாரித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரடொக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம் கையெழுத்து! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!

மஹிந்திரா ஹாலிடேஸ்: 4வது காலாண்டு லாபம் 43% சரிவு!

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய வங்கதேசம்!

தரம் இல்லாத கேன் குடிநீர் விற்பனை செய்தால் ரூ. 5,000 அபராதம்!
வீடியோக்கள்

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு


