டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

தனி ஒருத்தி

விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பதற்கேற்ப,  சென்னையைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி மிரிதுளா,  குவாண்டம் கம்ப்யூட்டிங் துறையில் சாதனை படைக்கத் தயாராகி வருகிறார்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:07 am

ஆர். வேல்முருகன்

விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பதற்கேற்ப, சென்னையைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி மிரிதுளா, குவாண்டம் கம்ப்யூட்டிங் துறையில் சாதனை படைக்கத் தயாராகி வருகிறார். இவர் மென்பொருள் பொறியாளர் சரவணன்- தனியார் பள்ளி அறிவியல் ஆசிரியை சுஜாதா தம்பதியின் 16 வயது மகள்.

சிங்கப்பூர், மலேசிய நாடுகளில் சரவணன் பணியாற்றியபோது, அங்கு மிரிதுளா படித்ததால் பிரெஞ்ச், ஜெர்மன் ஆகிய மொழிகளைக் கற்றார். தாய் மொழி தமிழ். ஆங்கிலம், ஹிந்தியும் கற்றுக் கொண்டார். ஆக. 5 மொழிகளிலும் சரளமாய் உரையாடுகிறார்.

2019-இல் அமெரிக்க நாட்டின் வர்ஜீனியா மாகாணத்தில் உலகம் முழுவதுமிருந்து பள்ளி மாணவ, மாணவியரைத் தேர்வு செய்து 10 நாள்கள் அங்கு மாநாடு நடத்தினர். சர்வதேச விண்வெளி மேம்பாடு மாநாட்டில் பங்கேற்ற அனைவரையும் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இதில் இந்தியாவில் இருந்து 20 குழுக்கள். ஒவ்வொரு குழுவிலும் 5 முதல் 7 பேர் வரை.

அப்போது நடைபெற்ற விவாதப் போட்டியில் மிரிதுளா 2-ஆம் பரிசு வென்றார். அங்கிருந்து வந்தபின் மிரிதுளா குவாண்டம் கம்ப்யூட்டிங் தொடர்பான தேடுதல்களைத் தொடங்கினார். அப்போது, ஐபிஎம் நிறுவனம் குவாண்டம் கம்யூட்டிங் தொடர்பான 100 சதவீத உதவித்தொகையுடன் பாடம் கற்றுக் கொடுத்தது.சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு உதவித் தொகை கிடைத்தது.

"கியூ-வொர்ல்டு' என்ற நிறுவனம் உலக அளவில் இவ்வாறான மாணவர்களின் கட்டுரைகளையும் அவர்களின் பிற தகுதிகளையும் பார்த்து 100 பேரைத் தேர்வு செய்கிறது. இந்தத் திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்ட ஒரே பள்ளி மாணவி உலக அளவில் மிரிதுளா மட்டுமே.

இந்த ஆண்டு கனடாவில் உள்ள இன்ஸ்டிட்யூட் ஆஃப் குவாண்டம் என்ற அமைப்பும் உலக அளவில் 44 பள்ளி மாணவர்களை உயர் பயிற்சிக்குத் தேர்வு செய்தது. அதிலும் இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே மாணவி மிரிதுளா மட்டுமே.

கனடாவின் வாட்டர்லூ பல்கலைக் கழகத்தில்உள்ள இன்ஸ்டிட்யூட் ஆஃப் குவாண்டம் கம்ப்யூட்டிங்கில் 2 வாரங்கள் பயிற்சி பெற்று, ஜூலை மாத இறுதியில் இந்தியாவுக்கு வந்தார்.

""செயற்கை நுண்ணறிவு, உலக அளவில் மிகப் பெரிய சவாலாக உருவெடுத்து வரும் சைபர் பாதுகாப்பு போன்ற துறைகளில் குவாண்டம் கம்ப்யூட்டிங்கின் பயன்பாடு அதிகரிக்கும். கிரிப்டோகிராபி, குவாண்டம் டெலிபோர்ட்டேசன், லேசர் கூலிங் போன்ற அம்சங்களும் இதில் முக்கியத்துவம் பெறுகிறது'' என்கிறார் மிரிதுளா.

இது தவிர இணையதள வடிவமைப்பு, வானவியல், மேடைப் பேச்சு, எழுதுதல், மொழிபெயர்ப்பு எனப் பல்வேறு துறைகளிலும் கலக்குகிறார் மிரிதுளா. " அன்டர்ஸ்டாண்டிங் குவாண்டம் கம்ப்யூட்டிங் ஃபார் பிகினர்ஸ்' என்ற ஆங்கில நூலின் ஆசிரியரும் இவர்தான்.

மிரிதுளா படிக்கும் அடையாறு பாலவித்யா மந்திர் பள்ளி, மாணவியின் திறமையை ஊக்குவித்தனர்.

சி.எஸ்.ஐ.ஆர். விஞ்ஞானி ஒருவரின் மேற்பார்வையில் கணித ஆராய்ச்சி மேற்கொண்டபோது கணினி மேல் ஈர்ப்பு வந்து மிரிதுளாவின் குவாண்டம் கம்ப்யூட்டிங்கில் நுழைந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.