"வீடு கட்ட மணல், சிமெண்ட் கொஞ்சம் போதும்... வீடு கட்டிய பிறகு வீட்டில் மின் விசிறி வேண்டாம்.. ஏ.சி வேண்டாம்... குளுகுளு என்று வாழலாம்' என்கிறார் களிமண் வீடு கட்டிக் கொடுக்கும் கேரளத்தைச் சேர்ந்த பொறியாளர் பி. கே. சீனிவாசன்.
""களிமண்ணில் வீடு கட்டுவதில் விற்பன்னராக இருந்த லாரி பேக்கர்தான் எனது குரு. அவரிடம் உதவியாளராக சேர்ந்து குறைந்த செலவில் களிமண் வீடு கட்டுவதற்கான யுக்திகளை நான் கற்றுக் கொண்டேன்.
1994-இல் "வாஸ்துகம்' என்ற பெயரில் வீடு கட்டிக் கொடுக்கும் நிறுவனத்தைத் தொடங்கினேன். எனது முதல் களிமண் கட்டடம் புதுச்சேரி ஆரோவில் அருகிலுள்ள ஆதிசக்தி கலையரங்கம். சிவப்பு கற்களால் பழமையில் புதுமை சேர்த்துக் கட்டப்பட்ட அருமையான கலைப் பொக்கிஷம்.
"டாக்டர் சூர்தாஸ் அவர் மனைவி டாக்டர் மினு 2015-ஆம் ஆண்டு தங்கள் பழைய வீட்டை இடித்துவிட்டு புது வீடு கட்ட வேண்டும் என்று என்னை அணுகினார்கள். அவர்களது வீடு கேரளாவிலுள்ள திருச்சூர் அருகே ஒல்லூர் என்ற ஊரில் அமைந்திருந்தது. இயற்கையோடு இணைந்து போகிற மாதிரி வீடு அமைய வேண்டும் . முக்கியமாக களிமண்ணில் கட்டப்பட வேண்டும் என்பது அவர்களின் விருப்பம். ஓர் ஆண்டிற்குள் அவர்கள் மனதில் கனவு கண்ட வீட்டைவிட அருமையான அழகான வீடு ஒன்றினை களிமண் பயன்படுத்திக் கட்டிக் கொடுத்தேன். புதிய வீட்டிற்காக இடிக்கப்பட்ட பழைய வீட்டின் மரத்தூண்கள், மர ஜன்னனல்கள், கதவுகள், செங்கல்கள், மங்களூர் ஓடுகள் எல்லாவற்றையும் மீண்டும் பயன்படுத்திக் கொண்டோம். களிமண்ணை அஸ்திவாரம் தோண்டும் போது கிடைத்த களிமண்ணுடன் வெளியே இருந்தும் களிமண்ணை விலைக்கு வாங்கினோம்.
ஓல்லூரில் சுமார் 2700 சதுரஅடி கொண்ட புதிய களிமண் வீட்டில் மூன்று படுக்கை அறைகளும் விசாலமான கிச்சன், ஹால், வரவேற்பறை உண்டு. பாறைக் கற்கள் அஸ்திவாரத்திற்குப் பயன்படுத்தப்பட்டன. சூரிய ஒளியில் உலர்த்தப்பட்ட செங்கல்கள், களிமண், சுண்ணாம்பு காரை சுவர்களுக்குப் பயன்படுத்தப்பட்டன. தேவையான இடங்களில் மட்டும் கான்கிரீட். அதுவும் சிறிய அளவில் பயன்படுத்தப்பட்டது.
களிமண் வீட்டு சுவர்களுக்கு இரண்டு பூச்சு தரப்படும். முதல் பூச்சில் களிமண், கொஞ்சம் மணல், நெல் உமி, கொஞ்சம் சிமெண்ட் சேர்த்து பூசுவோம். இரண்டாவது பூச்சில் களிமண் பொடி, சலிக்கப்பட்ட மணல், சுண்ணாம்பு, கொஞ்சம் சிமெண்ட் கலந்து பூசுவோம். களிமண் அதிகமாகப் பயன்படுத்துவதால் வீட்டிற்குள் குளுமையாக இருக்கும்.
வீட்டினுள் குளுகுளு என்றிருப்பதால் , மின்விசிறியோ, ஏசியோ தேவைப்படாது. டாக்டர் தம்பதி மின்விசிறிகளையும், ஏசிகளையும் பொருத்தியிருந்தாலும் எப்போதாவதுதான் பயன்படுத்துகிறார்கள். களிமண்ணின் நிறம் அது இருக்கும் இடம், நிலத்திற்கு ஏற்ப மாறுபடும். அதனால் சுவர்கள் பல நிறத்தில் அமைந்து அழகாக கலை நயத்துடன் இருக்கும்.
களி மண் வீடுகட்ட அதிகம் செலவாகும். ஆனால் நிச்சயமாக களிமண் வீடுகள் கார்பன் டை ஆக்ûஸடு சுற்றுப்புறத்தில் கூடுவதைக் குறைக்கும்'' என்கிறார் சீனிவாசன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஓராண்டாக நீடிக்கும் நடவடிக்கை! இந்திய வானில் மே 24 வரை பாக். விமானங்கள் பறக்க தடை!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! - நேரலை!

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
வீடியோக்கள்

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை


