உடல் சிலிர்க்க கண்கள் பனிக்க, உள்ளம் உருக இத்தனை பெருமாள்களையும் ஒரே நாளில் கண்டு களித்தேன். அங்கே இருந்த குருக்களில் ஒருவர் சொன்னார், "தை மாதத்தில் அமாவாசைக்கு மறுநாள் இந்த பதினொரு கோயில்களில் உள்ள உற்சவ பெருமாள்கள் அனைவரும், பதினொரு கருட வாகனத்தின் மீது அமர்ந்து உலா வருவார்கள். திருமணிமாடக் கோயில் என்று அழைக்கப்படும் நாராயணப் பெருமாள் சந்நிதிக்கு வெளியே போடப்பட்டிருக்கும் பந்தலின்கீழ் இந்த திவ்ய அணிவகுப்பை கண்ணாரக் காணலாம்' என்றார்.
சில்லென்று பனிக்காற்று, என்னுடலுக்குள் ஊடுருவிச் சென்று என்னை மெய் குளிரச் செய்தது. திருநாங்கூரில் ஒரு வீட்டின் திண்ணையில் நானும் என் கணவரும் சில நண்பர்களுடன் அமர்ந்து கொண்டிருந்தோம். இந்த வீட்டின் வழியாகத்தான் கருட வாகனங்கள் செல்லும் என்று எங்களோடு வந்த "கைட்' சொன்னதினால் நாங்கள் அந்த திண்ணை
களில் உட்கார்ந்து காத்துக் கொண்டிருந்தோம். அந்த வீட்டில் இருந்தவர்கள், டம்ளர்களில் சுடச் சுட "
சுக்கும், பனைவெல்லமும் கலந்த பாலைக் கொண்டுவந்து கொடுத்து, குடிக்கும்படி உபசரித்தனர்.
அந்த குளிருக்கு சூடான பால் தொண்டைக்கு இதமளித்தது. சிறிது நேரத்தில் அந்த வீட்டுக்குள்ளிருந்து எழுபத்து ஐந்து வயது மதிக்கத்தக்க தாத்தா ஒருவர் வெளியே வந்து எங்களுடன் அமர்ந்து கொண்டார்.
""எங்கிருந்து வர்றீங்க''
""தாத்தா, நாங்க சென்னையிலிருந்து வருகிறோம்'' என்றார் என் நண்பர்.
""பரவாயில்லையே பதினொரு கருட சேவையைப் பார்க்க நேரத்தை ஒதுக்கி வந்திருக்கிறீர்களே''என்றார்.
""எல்லாம் என் மனைவி சொல்லித்தான் நாங்கள் வந்தோம்'' என்று கணவர் கூற,
""சரி, இந்த திருநாங்கூர் கோயில்கள் எப்படி உருவாயின தெரியுமா?'' என்றார் தாத்தா.
""தெரியாது'' என்று பலமாக நாங்கள் தலைகளை ஆட்ட, தாத்தா சொல்லத் தொடங்கினார்.
""பராசக்தி பார்வதி தேவியின் தந்தையான தக்க்ஷன் தன் மாப்பிள்ளையான சிவபெருமானை, தான் நடத்திய யாகத்தில் கலந்துகொள்ள அழைக்கவில்லை. சிவன் இதனால் வெகுண்டெழுந்தார், கோபத்துடன் ருத்ர தாண்டவம் ஆடத் தொடங்கினார். இது (மக்ஷஹஹ்ஹ)
உபய காவேரி என்ற இடத்தில் நடைபெற்றது.
"இது எங்கு இருக்கிறது' என்று ஆவலை அடக்க முடியாமல் கேட்டேன். "தெற்கில் காவேரி நதிக்கும், மேற்கில் மணி ஆற்றிற்கும் நடுவே இந்த இடம் இருக்கிறது. சீர்காழிக்கு தென்கிழக்கில் சில கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது' என்றார்.
""பிறகு என்ன நடந்தது'' என்றார் என் கணவர்.
""கோபத்தோடு ஆடிய சிவனின் முடிகள் ஒவ்வொன்றாக தரையில் விழ, ஒவ்வொரு முடியும் ஒரு சிவனாகி, அந்த சிவன்களும் ருத்ர நடனத்தை ஆடத் தொடங்கினர். இப்படியாக பதினொரு முடிகள் உதிர பதினொரு சிவன்கள் ருத்ர நடனம் ஆட, ஒரு ருத்ர நடனத்திற்கே இந்த பூமி தாங்காதே, பதினொரு சிவன்கள் ஆடினால் பூவுலகிற்கு அழிவுதான்'' என்று உணர்ந்த விஷ்ணு, சிவனின் முன்னால் தோன்றி பரமபத நாதனாகக் காட்சி அளித்தார்.
மனசாந்தி அடைந்த சிவன், விஷ்ணுவின் பல ரூபங்களைக் காண விருப்பம் கொண்டு தன் ஆசையை வெளியிட, விஷ்ணு பதினொரு, வேறு வேறு உருவங்களில் காட்சி அளிக்க, அந்த சம்பவம் நடந்தேறிய திருநாங்கூரிலேயே இந்தந்த உருவங்களுக்கான கோயில்கள் ஏற்பட்டன. பின்பு அவைகளே திவ்விய தேசங்கள் ஆயின'' என்றார். தொலைவில் டமர, டமர, டம் என்று சத்தம் கேட்க, அனைவரும் ஒரு எதிர்பார்ப்போடு எழுந்து நின்றோம்.
தொடரும்...