இப்படி கெட்டி சாணத்தில், கூம்பு வடிவத்தில் உச்சியில் அருகம்புல்லோடு, மஞ்சளில், களிமண்ணில், கருங்கல்லில், காகிதக் குழம்பில், வெள்ளியில், தங்கத்தில், பிளாட்டினத்தில், பித்தளையில், ஈயத்தில்.. அப்பப்பா! எந்த ஒரு பாகுபாடும் இல்லாமல் குளக்கரையில், அரசமரத்தடியில், கோயில்களின் நுழைவாசலில், தனிக்கோயில்களில், தனிமையில், சித்தி, புத்திகளின் துணையுடன், சிவன், பார்வதி, குகன் என்று தன் குடும்பத்துடன், சிறிதும், பெரிதுமாக என் சிறுவயது முதல் இன்றுவரை பார்த்து, கும்பிட்டுப் பழகிய எனக்கு, இந்த வருடம் பதினொரு நாட்கள் ஹைதராபாத்தில் கொண்டாடப்படும் விநாயகசதுர்த்தி பெருவிழாவின்பொழுது (Khairatabad) கைராடாபேட் என்ற இடத்தில் 57 அடி உயரத்தில், இடது கையில் 580 கிலோ எடை உள்ள லட்டுவை ஏந்தி விஸ்வரூப தரிசனம் கொடுத்த கைராடாபேட் கணேஷைத் தரிசிக்கும் பெரும் பாக்கியம் கிட்டியது.