/

எங்கெங்கு காணினும் இந்தியனடா!

உங்களுக்குத் தெரியுமா? ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 9-ஆம் தேதி "வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:51 pm

ராஜிராதா

உங்களுக்குத் தெரியுமா? ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 9-ஆம் தேதி "வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது 2003-ஆம் ஆண்டு முதல் தொடர்கிறது. வெளிநாட்டில் வாழும் இந்தியர்களை சர்ய் தங்ள்ண்க்ங்ய்ற் ஐய்க்ண்ஹய் (சதஐ) என அழைக்கின்றனர்.
ஏறத்தாழ 3 கோடி இந்தியர்கள் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். ஐ.நா - சர்வதேச இடம் பெயர்ந்தோர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. 2015-ஆம் ஆண்டின் கணக்குப்படி அதில் முதல் இடம் இந்தியர்களுக்கு.
இந்திய வெளியுறவுத் துறையின் கணக்கின்படி 2016-ஆம் ஆண்டு டிசம்பர் வரையில், 3.8 கோடி இந்தியர்கள் வெளிநாடுகளில் வாழ்கிறார்கள்.
சோழனும், சேரனும் ஜாவா, சுமத்ரா, பிஜி, பாலி உள்பட பல இடங்களைப் பிடித்து தங்கள் ஆட்சியை நிலைநாட்டினர்.
கம்போடியா போன்ற நாடுகளில் இந்திய கோயில்கள் உள்ளது என்றால் இந்தியர்களின் தாக்கத்தை நாம் நிச்சயம் புரிந்துகொள்ளலாம்.
அரபு நாட்டிற்கு வர்த்தகம் தொடர்பாக 16-ஆம் நூற்றாண்டிலேயே சென்றுள்ளனர். அரபு நாடுகளில் எண்ணெய் கிடைத்து அவை கொழிக்க ஆரம்பித்ததும், ஏராளமான இந்தியர்கள் அந்த நாடுகளுக்குச் சென்றனர்!
கிரேக்க நாட்டுடன், பல நூறு ஆண்டுகளாக வியாபாரம் நடக்கிறது. இது சார்ந்து பல வியாபாரிகள் அங்கு சென்று வந்துள்ளனர்.
ரஷ்யாவுக்கு 18-ஆம் நூற்றாண்டிலும், அமெரிக்காவுக்கு 19-ஆம் நூற்றாண்டிலும் இந்தியர்கள் செல்ல ஆரம்பித்தனர். கனடாவுக்கு 1897-இல் சென்றனர். பிரிட்டிஷ் கயானாவுக்கு 1838-ஆம் ஆண்டில் ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டிலிருந்து ஏராளமான ஊழியர்கள், கரும்புத் தோட்டங்களில் வேலை செய்ய கப்பல்கள் மூலம் சென்றதாக வரலாறு கூறுகிறது.
ஆக, வேலை தேடிச் சென்ற இந்தியர்களில் தொழிலாளர்கள், எஞ்சினீயர்கள், மருத்துவர்கள், பேராசிரியர்கள், ஆடிட்டர்கள், பொருளாதார நிபுணர்கள், வியாபாரிகள் எனப் பலர் அடங்குவர்...! இவர்களில் பலர் புகழின் உச்சியைத் தொட்டு இந்தியாவுக்குப் பெருமையைத் தேடித் தந்துள்ளனர்.
இப்படி இவர்கள் மத்திய கிழக்கு நாடுகள், கனடா, அமெரிக்கா, பிரிட்டன், மொரிஷியஸ், தென் ஆப்பிரிக்கா - கென்யா, மலேசியா - சிங்கப்பூர், ஃபிஜி தீவுகள், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, நேபாளம், நெதர்லாந்து, டிரினிடாட் மற்றும் டொபாக்கோ ஆகிய இடங்களில் பரவலாக மிக அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் உள்ளனர்.
கம்ப்யூட்டர் துறையின் முன்னேற்றம், இந்தியர்களுக்கு அமெரிக்கா உள்பட பல நாடுகளில் படித்த எஞ்சினீயர்களுக்கு ஏராளமான வாய்ப்புகளைப் பெற்றுத் தந்தது.
உலகம் முழுவதும், குஜராத் பட்டேல் இன மக்களின் ஹோட்டல்கள்... 50,000-க்கும் அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
கூகுள் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தமிழர் சுந்தர் பிச்சை, உச்சப் பதவியில் உள்ளார்.
இந்திரா கிருஷ்ணமூர்த்தி நூயி - பெப்சியின் முதன்மை அதிகாரியாக, பல ஆண்டுகளாகத் தொடருகிறார். இவரை உச்சத்தில் டாடா அண்ட் சன்ஸ் நிறுவனத்திற்கு நியமிக்கலாமா என டாடா நிறுவனம் நினைத்தது.
உலகின் 5-ஆவது மிகப்பெரிய பணக்காரராகக் கருதப்படும் லட்சுமி மிட்டல், உலகின் மிகப் பெரிய எஃகு நிறுவனமான ஏர்டெல் மிட்டலின் தலைமை ஸ்தாபகர்!
உலகின் பெரிய பணக்காரர்களில் ஒருவர் வாரன் பஃப்பெட். இவர் "ஹாத்வே' நிறுவனர். இந்த நிறுவனம் சிறக்க முக்கிய காரணம், அஜித் ஜெயின்!
பிரபல எகனாமிஸ்ட் மற்றும் சிந்தனையாளர் அமர்தியா சென். இவரும் இந்தியர்.
மைக்ரோ சாஃப்ட் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் முதன்மை அதிகாரி சத்யா நடேல்லா.
- இவர்களைப்போல் அன்சூ ஜெயின் (பேங்கர்); சந்த்சிங் சத்வால் (4 நாடுகளில் 14 ஹோட்டல்களை நடத்தும் அதிபர்- அமெரிக்க குடியரசுத் தலைவரின் சிறப்பு விருந்துகளில் அழைக்கப்படும் நபர்களில் இவரும் ஒருவர்!),
டாக்டர் சஞ்சய் குப்தா (நியூரோசர்ஜன் மற்றும் டிவி பர்சனாலிட்டி); ஜகதீஷ்பகவதி (பொருளாதார நிபுணர்); ரகுராம் ராஜன் (முன்னாள் இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர்) ஆகியோரும் மிகப் பிரபலமான இந்தியர்களில் சிலர்!
உலகின் புலம்பெயரும் பலர், 20 நாடுகளில் மட்டுமே குடியேறுகின்றனர். இவர்கள் மொத்த புலம்பெயர்பவர்களில் 2 / 3 சதவீதம் ஆகும்.
இப்படி புலம்பெயர்பவர்கள் ஆசியாவில் 11 நாடுகளிலும், ஐரோப்பிய யூனியனில் 6 நாடுகளிலும்தான் பெரும்பாலும் குடியேறியுள்ளனர். அமெரிக்காவில் வசிப்பவர்களில், புலம் பெயர்ந்தவர்கள் 19 சதவிகிதம். அதாவது 46.6 மில்லியன் பேர் உள்ளனர்.
இந்தியாவும் புலம்பெயர்ந்து வருபவர்களின் நாடுகளில் ஒன்றுதான்! இது 12-ஆவது இடத்தில் உள்ளது. 1990-இல் புலம் பெயர்ந்தோர் எண்ணிக்கை 7.5 மில்லியனாக இருந்தது. ஆனால், இது 2015-இல் 5.2 மில்லியனாகக் குறைந்துவிட்டது.
வருங்காலங்களில் இந்தியர்களின் திறமையையும், உழைப்பையும் பயன்படுத்திக்கொள்ள மேலும் பல நாடுகளும் முன்னுக்கு வரலாம். இதனால் வருங்காலத்தில் ஒரு நாள், உலகம் முழுவதும் நிஜமாகவே இந்தியர்களின் ஆட்சியும் ஆளுமையும் ஏற்படலாம். ஆனால் நிச்சயம் இது படை பலத்தால் அல்ல... மாறாக மூளை மற்றும் உழைப்பால் மட்டுமே!! கொண்டாடுவோம்... மகிழ்வோம்!

உலகமெங்கும்...

  • ஆசியாவுக்கு அடுத்து இந்தியர்கள் மிக அதிகம் வசிப்பது அமெரிக்காவில்தான்! 31,83,063 இந்தியர்கள் அமெரிக்காவில் வசிக்கின்றனர். நியூஜெர்சி, மன்ஹாட்டன்... க்யூன்ஸ்.. நியூயார்க் உள்பட பல நகரங்களில் ஏராளமான இந்தியர்களைக் காணலாம்.
  • பிரிட்டனில் 14, 51, 862 பேர் வசிக்கின்றனர்.
  • கனடாவில் ஒரு கோடியே 20 லட்சம் இந்தியர்கள் உள்ளனர்.
  • நேபாளத்தில் 4 மில்லியன், தென் அரேபியாவில் 3 மில்லியன் இந்தியர்கள்உள்ளனர்.
  • மலேசியா (2.4 மில்லியன்); அரபு எமிரேட்ஸ் (2.2 மில்லியன்); தென்னாப்பிரிக்கா (1.3 மில்லியன்) மற்றும் மியான்மரில் (1.1 மில்லியன்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.