இங்கிலாந்தில் உள்ள குண்டு பெண்மணிகளை இப்போது உடற்பயிற்சி மையங்களில் தான் பார்க்க முடிகிறது. "குண்டாக இருப்பவர்கள் மெலிந்தால் பரிசு வழங்கப்படும்' என்று அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது தான் இதற்குக் காரணம்.
படித்தால்தான் திருமணம்
இந்தோனேசியாவில் குழந்தை திருமணங்கள் வேகமாக அதிகரித்து வருகின்றன. இதனால் அதிர்ந்து போன அந்நாட்டு அரசு, ""ஆணும் பெண்ணும் 9-ஆம் வகுப்பு வரை படித்திருந்தால் மட்டுமே இனிமேல் திருமணம் செய்து கொள்ள முடியும்'' என்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
செல்லிடப்பேசி வெளிச்சத்தில் பிரசவம்
ரஷியாவைச் சேர்ந்தவர் ரிமாபிரோவா (வயது22) பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிரசவ நேரத்தில் திடீர் மின்தடை ஏற்பட்டது. அங்கிருந்த ஜெனரேட்டரும் வேலை செய்யவில்லை. உடனே மருத்துவர்களுக்கு ஒரு யோசனை தோன்றியது. அங்கிருந்த 12 பேரின் செல்லிடப்பேசிகளை வாங்கி, அவற்றின் வெளிச்சத்தில் பிரசவம் பார்த்து முடித்தனர்.
மனைவியர் அபராதம்
கோவையை அடுத்த ஆனைக்கட்டி மலைப் பகுதியில் சுமார் 150 கிராமங்கள் உள்ளன. கேரள மாநிலத்தைச் சேர்ந்த இந்த மலைக் கிராமங்களில் ஆண்களுக்கு பெண்கள் சில கட்டுப்பாடுகளை வைத்துள்ளனர்.
ஊருக்குள் ஆண்கள் சீட்டாடவோ, மது அருந்தவோ கூடாது. மீறி மது அருந்திவிட்டு தள்ளாடியபடி வந்தால் அபராதம் விதிக்கப்படும். இதற்காக பெண்களால் நடத்தப்படும் "தாய்க்குலம்' என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது.
-போளூர் சி.ரகுபதி
** லட்சத் தீவுகள் என்று அழைக்கப்படும் தீவுக்கூட்டத்தில் லட்சம் தீவுகள் கிடையாது. வெறும் 27 தீவுகள் மட்டுமே உள்ளன.
** அன்னாசிப் பழத்துக்கு ""வெப்ப நாடுகளின் ராணி'' என்ற சிறப்புப் பெயருண்டு.
- மா.உலகநாதன்
** தந்தையை பர்மிய மொழியில் "பாபா' என்றும் கொரிய மொழியில் "அப்பா' என்றும் அரபியில் "பாபா' என்றும் பிரெஞ்சு மொழியில் "பப்பா' என்றும் அழைப்பார்கள்.
("முன்னேற்றத்திற்கான முக்கிய தகவல்கள்' என்னும் நூலிலிருந்து)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுக 20 இடங்களில் வென்றாலே ஆச்சரியம்தான்: இபிஎஸ் பேச்சு

கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெயிண்ட் விலை அதிகரிப்பு!

வைத்தீஸ்வரன் கோயிலில் நகரத்தார் குலதெய்வ வழிபாடு: திரளானோர் பங்கேற்பு!
நானும் திராவிடன்தான்! சென்னையில் சந்திரபாபு நாயுடு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

