காய்ச்சாத பாலில் முகத்தைத் துடைக்கவும். சிறிது வெள்ளரிச்சாறு, சிறிது ஸ்ட்ராபெர்ரி சாறு எடுத்து ப்ரிஜில் 5 நிமிடம் வைத்து பிறகு முகத்தில் மசாஜ் செய்யவும். அதன் பிறகு மசித்த பப்பாளிப்பழம், இரண்டு துளி தேன், சிறிது பால் கலந்து முகத்திற்கு பேக் போட்டு வரவும்.
காய்ச்சாத பாலில் முகத்தைத் துடைத்துவிட்டு முட்டை கோஸ் சாறு கொண்டு முகத்தில் லேசாக மசாஜ் செய்யவும். பிறகு பஞ்சைக் கொண்டு துடைத்துவிட்டு. முட்டைகோஸ் விழுது, பால், தேன் கலந்து முகத்திற்கு பேக் போட்டு பதினைந்து நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இவை இரண்டு பேக்குகளும் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை செய்து கொள்ளலாம். முகப்பரு இல்லாதவர்கள் பத்து நாட்களுக்கு ஒருமுறை செய்து கொள்ளலாம்.
வாரத்திற்கு ஒருமுறை சிறிது தேன், சிறிது பாலேடு, சிறிது வெள்ளரிச் சாறு, கடலைமாவு நான்கையும் குழைத்து முகத்தில் தடவி பதினைந்து நிமிடத்திற்குப் பின் கழுவி வரலாம்.
மசித்த வாழைப்பழத்துடன், சிறிது தேன், சிறிது பயற்ற மாவு குழைத்து முகத்தில் தடவி ஊற வைத்து பதினைந்து நிமிடம் கழித்து கழுவி வரலாம். இப்படி செய்து வந்தால் நிச்சயம் நிறம் மாறுவதைக் காணலாம்.
நல்ல சூடான பாலில் குங்குமப்பூவைப் போட்டு சிறிது நேரம் மூடி வைத்துவிட வேண்டும். பால் மிதமான சூட்டிற்கு வந்த பிறகு பாலைக் குடிக்க வேண்டும். இப்படி செய்வதாலும் நிறம் கூடும்.
ஆயுர்வேதக் கடைகளில் குங்குமாதி என்ற தைலம் கிடைக்கும். இதனை வாங்கி கொஞ்சம் பாலுடன் கலந்து வாரம் ஒருமுறை முகத்துக்கு மசாஜ் செய்து வந்தால் நிச்சயம் நிறம் கூடும். மசாஜ் செய்த பிறகு அரைத்த சந்தனத்தில் பால்விட்டுக் குழைத்து முகத்தில் தடவி பதினைந்து நிமிடம் ஊற வைத்து கழுவிவிட வேண்டும். இது மிகவும் முக்கியம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை

ஹோர்முஸ் நீரிணையில் சிறிய படகுகள்கூட தயக்கமின்றி சுட்டு வீழ்த்தப்படும்: அமெரிக்க கடற்படைக்கு டிரம்ப் உத்தரவு

"ஆடிப்பாடி அல்ல...! அறிவைப் பயன்படுத்தி வாக்களியுங்கள்!" இயக்குநர் மாரி செல்வராஜ்

தமிழ்நாட்டில் 84.51% வாக்குப்பதிவு! 6 மணி நிலவரம்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


