டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

‘6’ என் மீதான பார்வையை மாற்றியிருக்கிறது! ஷாம்

"நான் எப்படி வர வேண்டும் என தீர்மானித்த ஜீவா இன்று இல்லை. இந்நேரம் அவர் இருந்திருந்தால் ரொம்பவே பெருமைப்பட்டிருப்பார். இப்போது நான் வந்திருக்கிற இந்த இடம், இதற்கான தேடல்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருப்பார்.''

News image
Updated On :3 ஜனவரி 2024, 6:00 pm

ஜி. அசோக்

"நான் எப்படி வர வேண்டும் என தீர்மானித்த ஜீவா இன்று இல்லை. இந்நேரம் அவர் இருந்திருந்தால் ரொம்பவே பெருமைப்பட்டிருப்பார். இப்போது நான் வந்திருக்கிற இந்த இடம், இதற்கான தேடல்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருப்பார்.'' கலகலப்பாக தொடங்குவார் என பார்த்தால் ஃபிலீங்ஸுடன் பேட்டியைத் தொடங்கி வைக்கிறார் ஷாம்.
 எல்லோரும் யோசிக்கிற போது நீங்கள் மட்டும் கட கடவென படங்கள் நடித்துக் கொண்டிருந்தீர்கள்... இப்போது சீரியஸôகப் பேசுகிற அளவுக்கு சினிமா என்ன மாற்றம் தந்தது....?
 பெரிய போராட்டங்களுக்குப் பின் ஜீவா சாரின் பரபர அறிமுகத்தில் "உள்ளம் கேட்குமே' படத்தில் நடித்தேன். அதன் பின்னும் குறிப்பிட்ட இமேஜுக்குள் சிக்காமல் நிதானமாகத்தான் இருந்தேன். "இயற்கை', "12 பி' என ஒவ்வொரு பேக்கேஜும் தனித்துவமாகத்தான் இருந்தது. சில படங்களுக்குக் கிடைத்த மரியாதை என்னை நல்ல இடங்களுக்குக் கொண்டு சென்றது. இருந்தும் நிறைய சறுக்கல்கள். நிதானமாக நின்று யோசிப்பதற்குள் ஏதேதோ நடந்து முடிந்து விட்டது. இப்போது நீங்கள் பார்க்கிற ஷாம் வேறு. நிறைய பாடங்கள் படித்திருக்கிறேன். உண்மையான உழைப்பை எந்த படத்துக்குத் தர வேண்டும் என்கிற கணிப்புக்குள் வந்திருக்கிறேன். அப்படி நான் தேர்வு செய்து நடித்த படம் "6.' உடல் சுருக்கி, முடி வளர்த்து நான் பட்ட கஷ்டம் கால காலத்துக்கும் எனக்கான எரிபொருள். "6' படத்தில் நீங்கள் பார்த்த ஷாம், மிகுந்த கஷ்டத்துக்கு பின் உருவாகியிருக்கிறான். பச்சை தண்ணீர் கூட குடிக்காமல் வாழ்ந்தேன். அபரிமிதமான உழைப்பு தேவைப்பட்டதால், எனக்கு நானே சபாஷ் போட்டுக் கொண்டும், எனக்கு நானே குறை கூறிக் கொண்டும் வாழ்ந்த நாள்கள் அவை. ரொம்பவே ரௌத்ரமாக வாழ்ந்த நாள்களில் உள்ளுக்குள் வெறியும் இருந்திருக்கிறது. நான்கு படங்களுக்கான உழைப்பு என்கிற போது, கொஞ்சம் யோசித்து பார்த்தால் என்னை எனக்கே பார்க்க ஆச்சரியம். உடம்பை ஏற்ற, இறக்க நான் பட்ட கஷ்டம் நிறைய. உடம்புக்கு வயசும், மனசுக்குள் வலிமையும் இருந்ததால்தான் இதைச் சாதிக்க முடிந்தது. படம் வந்த பின் கிடைத்திருக்கிற பாராட்டு, ""ஷாம் உங்களுக்கு இதுதான் நல்ல ரூட்...''ன்னு யாரோ சொல்லிப் போகிற வார்த்தைகளெல்லாம் பட்ட வலிகளைப் பறக்கடிக்கின்றன.
 சாக்லேட் பாய் இமேஜிலிருந்து வரிசையாக ஆக்ஷன் பாணிக்கு ஹீரோக்கள் வர்றாங்க... அந்த பலப் பரீட்சையில்தான் நீங்களும்...?
 அப்படியில்லை. என்னாலும் எதுவும் முடியும் என சிலர் நம்புகிறார்கள். இவன் தொடர்ந்து காதலித்து கொண்டே இருந்தால் சரியாக வராது என சிலர் நினைத்தார்கள். அப்படி வழி நடத்தும் இடத்தில் வி.எசட்.துரை இருந்தார். ஜீவா, ஜனநாதன் சார் மாதிரியான ஆளுமைகள் எனக்கான பாதையை சரியாகத்தான் சொன்னார்கள். நான் கொஞ்சம் தடம் மாறி விட்டேன். சக்கரத்தை சுற்றி விடுவது சிலரின் கடமை. எந்த எண்ணில் நிற்க வேண்டும் என்பதை காலம்தான் முடிவு செய்ய வேண்டும்.
 பல ஹீரோக்கள் பண்ணுகிற பாட்டு, பைட்டு எல்லாம் நீங்கள் எப்போதோ செய்தீர்கள்... இருந்தும் உங்களுக்கான இடம் கிடைக்கவில்லை என்பதில் வருத்தம் இருக்கிறதா?
 எல்லா படங்களிலும் வெற்றிகள் தொடர வேண்டும் என்றுதான் கணக்குப் போடுகிறோம். சில இடங்களில் அந்தக் கணக்கு தவறாகி விடுகிறது. என்னிடம் என்னென்ன தவறுகள் இருக்கிறதென இன்று வரைக்கும் தெரியவில்லை. ஒவ்வொரு படத்துக்கும் பெஸ்ட் உழைப்பைத்தான் தந்திருக்கிறேன். "6' என் மீதான பார்வையை மாற்றியிருக்கிறது. சொல்லப் போனால் எல்லாமும் நல்ல படங்கள்தாம். ஒரு சமயத்தில் என்னை சுற்றி இருந்த தனிமைதான், எனக்குள் வெறி ஏற்றி விட்டது. ஒரு விதத்தில் அதுதான் எனக்கு ஸ்டார்ட் பட்டன்.
 ஒவ்வொரு வார்த்தையிலும் அனுபவங்கள் நிரம்பி வழிகின்றன. இத்தனை வருடங்களில் நீங்கள் எவற்றையெல்லாம் கற்றுக் கொண்டீர்கள்...?
 நிறைய கற்றுக் கொண்டேன். நல்ல விஷயங்களுக்காக இன்னும்.... இன்னும்.... காத்திருக்கலாம் என்ற பொறுமையைக் கற்றுக் கொண்டேன். அந்த பொறுமைக்கு என்னை இன்னும் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். பட ஆர்வத்தில் ஓடிக் கொண்டே இருந்ததால் நம் மீது யார் அக்கறையாக இருந்தார்கள் என்று தெரிந்து கொள்ளத் தவறி விட்டேன். நான் தவறு செய்த இடங்கள் இப்போதுதான் புரிய ஆரம்பித்திருக்கின்றன. அதற்கு மீண்டும் திரும்பவே கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். நல் வழி நடத்துபவர்கள் எப்போதும் கூடவே இருந்திருக்கிறார்கள். இப்போதும் இருக்கிறார்கள். அவர்களுக்காக உண்மையாக உழைக்க வேண்டும் என்பதை உணர்ந்திருக்கிறேன். அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மேலே இருக்க வேண்டும் என்பதற்காக இன்னும் அதி வேகமாக ஓட இருக்கிறேன். சில நேரங்களில் பக்கத்தில் இருப்பவர்களை ரோல் மாடல்களாக ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இருப்பதில்லை. அது எத்தனை தவறு என்பதை வாழ்வின் கடந்து போன சில நிமிடங்கள் உணர்த்தியிருக்கின்றன. இன்னும் சில காலம் கடந்து போக அந்த உணர்வுகள் என்னை வழி நடத்த வேண்டும்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.