ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

ஒரு லட்சம் மரக்கன்றுகள்!

வாசிக்க சுகாதாரமான காற்று கிடைப்பதே அரிதாகி வரும் நிலையில், அத்தகைய காற்று மனிதர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக பல லட்சம் மரக்கன்றுகளைப் பல்வேறு மாவட்டங்களில் நட்டு வருகிறார், பசுமையின் மீது பற்றுக் கொண்ட சமூக ஆர்வலர் பி.எஸ்.சங்கரநாராயணன்.

News image
Updated On :15 செப்டம்பர் 2013, 10:03 am

வாசிக்க சுகாதாரமான காற்று கிடைப்பதே அரிதாகி வரும் நிலையில், அத்தகைய காற்று மனிதர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக பல லட்சம் மரக்கன்றுகளைப் பல்வேறு மாவட்டங்களில் நட்டு வருகிறார், பசுமையின் மீது பற்றுக் கொண்ட சமூக ஆர்வலர் பி.எஸ்.சங்கரநாராயணன்.

திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடி பகுதியைச் சேர்ந்த அவர் கடந்த பல ஆண்டுகளாக இப்பணியைச் செய்து வருகிறார்.

""உலகின் புவி வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சுற்றுப்புற மாசுகளால் ஓசோன் படலத்தின் அடர்த்தி குறைந்து வருவதாக உலகமே அலறி வருகிறது. அதனை சமநிலைப்படுத்த ஒவ்வொரு நாடும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். மரங்கள், ஓசோன் அடர்த்தியை பாதுகாக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்த கருத்துக்களை கேட்ட பின்பு, மரங்களை நடுவதை தொடங்கினேன்'' என்ற அவர், முதற்கட்டமாக 2011-ம் ஆண்டு,1,11,111 மரக்கன்றுகளை சுழற்கழகத்தின் துணையுடன் நட்டுள்ளார்.

மாணவர்கள்தான் எதிர்கால நிஜங்களை உணர்ந்தவர்கள் என்பதால் அவர்களை மையப்படுத்தியே மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. மாணவர்களைக் கொண்டும், சமூக அமைப்புக்களைக் கொண்டும், மக்கள் பங்கேற்புடன் மரக்கன்றுகள் தெருக்கள்,பள்ளி வளாகங்கள்,மருத்துவமனைகள்,கோவில்கள் போன்றவற்றில் நடப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு மாணவனும் தான் நட்ட மரக்கன்றினை பாதுகாப்பாக பராமரிப்பதால் தற்பொழுது அனைத்துப் பகுதியிலும் மரங்கள் செழித்து வளர்ந்துள்ளன. காரைக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் சுமார் 3 லட்சம் மரக்கன்றுகளை மக்கள் பங்கேற்புடன் நட்டுள்ளேன். இதற்கு அனைத்து தரப்பு மக்களிடம் இருந்தும் நல்ல வரவேற்பு உள்ளது. செய்திகளில் இதனைப் படிக்கும் பலரும் தங்கள் பகுதியிலும், மரக்கன்றுகளை நடுவதற்கு அழைக்கிறார்கள். முடிந்த வரை அவர்களின் பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு வருகிறோம்.இதற்கு சுழற்கழக நிர்வாகிகள் எனக்கு உதவி வருகிறார்கள்'' என்று கூறிய அவரின் லட்சியம், நகரவாசிகளும் சுகாதாரமான காற்றினை சுவாசிக்கும் வகையில் புறநகர்ப் பகுதிகளிலும் மரக்கன்றுகளை நட வேண்டும் என்பதுதான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.