திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

மாற்றுத் திறனாளிகளுக்குப் பாதி விலை!

தேனியில் உள்ள தனியார் சிற்றுண்டிக் கடை ஒன்றில் கடந்த 4 ஆண்டுகளாக, மாற்றுத் திறனாளிகளுக்குப் பாதி விலையில் சிற்றுண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

News image
Updated On :3 ஜனவரி 2024, 6:07 pm

கோ.ராஜன்

தேனியில் உள்ள தனியார் சிற்றுண்டிக் கடை ஒன்றில் கடந்த 4 ஆண்டுகளாக, மாற்றுத் திறனாளிகளுக்குப் பாதி விலையில் சிற்றுண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
 மாற்றுத் திறனாளிகள் நலனுக்கான மனிதநேயப் பங்களிப்பாக, தேனி அல்லிநகரத்தைச் சேர்ந்த ராஜா (50) என்பவர், மாற்றுத் திறனாளிகளுக்கு பாதி விலை என்ற அறிவிப்புடன் போஸ்ட் ஆபீஸ் ஓடைத்தெருவில் சிற்றுண்டிக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் நடத்தி வரும் பாணி பூரிக் கடையில் பாணி பூரி, மசால் பூரி, பேல் பூரி, தயிர் பூரி, தகி பூரி உள்ளிட்ட 11 பூரி வகைகளும், இனிப்பு வகைகளும் விற்பனை செய்யப்படுகிறது.
 இது குறித்து கடை உரிமையாளர் ராஜா கூறியது: ""தேனியில் கடந்த 14 ஆண்டுகளாக எனது குடும்பத்தினர் சிற்றுண்டிக் கடை நடத்தி வருகிறோம். தொழிலில் லாபம் மட்டுமின்றி சேவை நோக்கமும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த 4 ஆண்டுகளாக எனது கடைக்கு வரும் மாற்றுத் திறனாளிகளுக்கு பாதி விலையில் சிற்றுண்டி வழங்கி வருகிறேன்''
 என்றார்.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.