லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சமையல்: தக்காளி அல்வா

தக்காளியை கொதிநீரில் போட்டு ஆறிய பின் தோலை உரித்துக் கொள்ள வேண்டும். அதனை நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும்

News image
Updated On :10 பிப்ரவரி 2013, 5:41 am

தேவையானவை:

பழுத்த தக்காளி- 400 கிராம்

சர்க்கரை- 200 கிராம்

நெய்- 200 கிராம்

முந்திரிப்பருப்பு- 50 கிராம்

திராட்சை- 50 கிராம்

ஏலக்காய்த்தூள்- சிறிதளவு

பச்சைக் கற்பூரம்- சிறிதளவு

செய்முறை: தக்காளியை கொதிநீரில் போட்டு ஆறிய பின் தோலை உரித்துக் கொள்ள வேண்டும். அதனை நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர்விட்டு சர்க்கரையைப் போட வேண்டும். பாகு கம்பிப் பதமாக வந்தவுடன் அரைத்து வைத்திருக்கும் தக்காளி விழுதைப் போட்டுக் கிளறி சுருள் பதம் வந்தவுடன் நெய்யை விட வேண்டும். முந்திரிப்பருப்பு, திராட்சை இவற்றையும் நெய்யில் வறுத்துச் சேர்க்க வேண்டும். இறுதியாக ஏலக்காய்த்தூளையும், பச்சைக் கற்பூரத்தையும் தூவி இறக்கிவிடவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.