லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சமையல்

பீட்ரூட்டையும், உருளைக்கிழங்கையும் தேவையான அளவு தண்ணீர்விட்டு வேக வைக்க வேண்டும். வேக வைத்த காய்கறிகளைத் துருவ வேண்டும்.

News image
Updated On :7 அக்டோபர் 2012, 1:09 pm

சமையல்உருளைக்கிழங்கு

பீட்ரூட் சாலட்

தேவையானவை:

உருளைக்கிழங்கு-2

பீட்ரூட்- 1

கடுகுப்பொடி- 1 தேக்கரண்டி

மிளகுத்தூள்- 1 தேக்கரண்டி

வினிகர்- 1 தேக்கரண்டி

உப்பு- தேவையான அளவு

தக்காளி கெச்சப் (அல்லது) ப்ரஷ் க்ரீம்- 100கிராம்

செய்முறை: பீட்ரூட்டையும், உருளைக்கிழங்கையும் தேவையான அளவு தண்ணீர்விட்டு வேக வைக்க வேண்டும். வேக வைத்த காய்கறிகளைத் துருவ வேண்டும். உப்பு, மிளகுத்தூள், கடுகுப்பொடி  மற்றும் வினிகர் சேர்க்க வேண்டும். நெய் தடவிய புட்டிங் கிண்ணத்தில் துருவிய காய்கறிகளை அழுத்தி நிரப்ப வேண்டும். சாலட்டின் மீது தக்காளி கெச்சப் அல்லது ப்ரஷ் க்ரீம் தோய்த்து அலங்கரிக்கலாம். ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்து பின் பரிமாற வேண்டும்.

தக்காளி சாலட்

தேவையானவை:

தக்காளி- 1/2 கிலோ

வெங்காயம்- 1

கடுகுப்பொடி- 1 மேஜைக்கரண்டி

வினிகர்- 1 மேஜைக்கரண்டி

எலுமிச்சைச்சாறு- 1 மேஜைக்கரண்டி

சர்க்கரை- 50 கிராம்

உப்பு, மிளகுத்தூள்- தேவையான அளவு

செய்முறை:

தக்காளியை வட்ட வட்டமாக வெட்டிக் கொள்ள வேண்டும். அதனுடன் வினிகரைக் கலக்க வேண்டும். அதன் பின்பு கடுகுப்பொடி எலுமிச்சைச்சாறு, சர்க்கரை, உப்பு, மிளகுத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளற வேண்டும். வெங்காயத்தை வட்ட வட்டமாக நறுக்கி அதன் மேலே தூவ வேண்டும். மொறுமொறுப்பான ரொட்டி மற்றும் சீúஸôடு இந்த சாலட்டைப்

பரிமாறலாம்.

வெள்ளரிக்காய் சாலட்

தேவையானவை:

வெள்ளரிக்காய்-2

சாதம்- 1/2 கப்

கொத்தமல்லி- 1 கட்டு

எலுமிச்சைச்சாறு- 1 தேக்கரண்டி

உப்பு- தேவையான அளவு

செய்முறை: வெள்ளரிக்காயை இரு பாகங்களாக நீளவாட்டில் நறுக்க வேண்டும். உள்ளிருக்கும் விதைகளை மட்டும் நீக்க வேண்டும். அதில் உப்புத் தூவி அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதனுடன் சாதம், எலுமிச்சைச்சாறு ஆகியவற்றைச் சேர்த்து அந்தக் கலவையை விதை நீக்கிய வெள்ளரிக்காயினுள் வைக்க வேண்டும். பரிமாறும்போது கொத்தமல்லித் தழையை தூவி பரிமாற வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.