எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

சினி மனி

கமல்ஹாசனைப் பார்த்துதான் சினிமாவைக் கற்றுக்கொண்டேன். நான் சிறு வயதில் பார்த்தபோது எப்படி இருந்தாரோ அப்படியேதான் இப்போதும் இருக்கிறார். கமல்ஹாசனை வைத்து ஒரு படம் இயக்குவதே என் வாழ்க்கையின் லட்சியம் என்

News image
Updated On :2 ஜனவரி 2024, 5:46 pm

மனோஜ் கிருஷ்ணா

கமல்ஹாசனைப் பார்த்துதான் சினிமாவைக் கற்றுக்கொண்டேன். நான் சிறு வயதில் பார்த்தபோது எப்படி இருந்தாரோ அப்படியேதான் இப்போதும் இருக்கிறார். கமல்ஹாசனை வைத்து ஒரு படம் இயக்குவதே என் வாழ்க்கையின் லட்சியம் என்கிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.

மறைந்த பிரபல கர்னாடக சங்கீத பாடகி மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி என்கிற எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ராஜீவ் மேனன் இந்தப் படத்தை இயக்குகிறார். ரஜினியின் "கோச்சடையான்', மணிரத்னத்தின் "கடல்' படங்களில் பணியாற்றி வரும் ராஜீவ் மேனன் இந்தப் படங்கள் நிறைவடைந்த பிறகு எம்.எஸ்.சுப்புலட்சுமியின் படத்தை இயக்கவுள்ளார்.

சங்கர் தயாள் இயக்கத்தில் கார்த்தி, ப்ரணிதா நடித்துள்ள "சகுனி' படத்தில் அனுஷ்கா சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். இதில் அவருக்கு "லேடி காமெடி போலீஸ்' வேடமாம்.

இளையராஜா இசையமைக்க கெüதம் மேனன் இயக்கத்தில் ஜீவா, சமந்தா நடித்துள்ள "நீதானே என் பொன்வசந்தம்' படத்தின் ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் ரூ.2 கோடிக்கும் அதிகமான தொகைக்கு பெற்றுள்ளது. தமிழ்ப் படவுலகில் அண்மையில் அதிக விலைக்கு விற்கப்பட்ட ஆடியோ உரிமை இதுதான்.

"திருப்பாச்சி', "சிவகாசி', "பழனி' உள்ளிட்ட படங்களை இயக்கிய பேரரசு முதல் முறையாக "சன் ஆஃப் அலெக்ஸôண்டர்' என்ற மலையாளப் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.

ஏரோபிக், யோகா, நடனம், தியானம் ஆகியவற்றின் மூலம் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் காஜல் அகர்வால் பட யூனிட் சாப்பாடு, ஸ்டார் ஹோட்டல் சாப்பாடு இவற்றை விரும்புவதில்லை. படப்பிடிப்புக்கு சமையல்காரர் ஒருவரை அழைத்து வந்து அவர் சமைப்பதை மட்டுமே சாப்பிடுகிறார்.

சிறிய பட்ஜெட்டில் இயக்குநர் எழில் தயாரித்து இயக்கிய "மனம் கொத்திப் பறவை' அனைத்துத் தரப்பினருக்கும் கணிசமான தொகையை வசூல் செய்து தந்திருக்கிறது. இதையடுத்து எழிலுக்கு மூன்று படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இரண்டு படங்களை வெளி நிறுவனங்களுக்கும் ஒரு படத்தைத் தன்னுடைய தயாரிப்பிலும் இயக்குகிறார்.

காமெடி நடிகர் சந்தானம் பட நிறுவனம் தொடங்கும் முடிவில் இருக்கிறார். முதலில் தயாரிக்கும் படத்தில் ஜெய், ஹன்சிகா ஆகியோருடன் அவரும் நடிக்கவுள்ளார். மூன்று கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தை ராம நாராயணன் இயக்குவார் எனத் தெரிகிறது.

கார்த்தியை வைத்து "ஆயிரத்தில் ஒருவன்' படத்தை இயக்கிய செல்வராகவன், அடுத்து சூர்யாவை வைத்து ஒரு பிரமாண்டமான படத்தை இயக்குகிறார்.

செல்வராகவனின் "இரண்டாம் உலகம்', சூர்யாவின் "சிங்கம் 2' படங்கள் முடிந்த பிறகு இந்தப் புதிய படம் தொடங்கப்படுகிறது. ஞானவேல்ராஜா படத்தைத் தயாரிக்கிறார்.

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் புதிய படத்தில் "பவர் ஸ்டார்' என்று தன்னை அழைத்துக்கொள்ளும் டாக்டர் சீனிவாசன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். விஜய் டி.வி.யின் "நீயா நானா' நிகழ்ச்சியில் தொகுப்பாளர் கோபிநாத்தைத் திணறடித்து ஏராளமான நேயர்களைக் கவர்ந்ததுதான் வாய்ப்புக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.