சிறுகதையிலிருந்து சினிமாவுக்கு...!
""ஒவ்வொருத்தனுக்கும் ஒரு வாழ்க்கை இருக்கு சார். அந்த வாழ்க்கையோட பின்னணிதான் இங்கு எல்லோரையும் வடிவமைச்சு வைச்சுருக்கு. சிறுகதை எழுத்தாளனாக இருந்த என்னை இப்போது சினிமா வரைக்கும் அந்த வாழ்க்கைதான் கொண்


""ஒவ்வொருத்தனுக்கும் ஒரு வாழ்க்கை இருக்கு சார். அந்த வாழ்க்கையோட பின்னணிதான் இங்கு எல்லோரையும் வடிவமைச்சு வைச்சுருக்கு. சிறுகதை
எழுத்தாளனாக இருந்த என்னை இப்போது சினிமா வரைக்கும் அந்த வாழ்க்கைதான் கொண்டு
வந்துவிட்டிருக்கு. இத்தனை வருஷ வாழ்க்கையில் சினிமாவுக்கும் எனக்கும் நடந்த போராட்டம்
கொஞ்சம் வித்தியாசமானது'' என்கிறார் இயக்குநர்
பாபு கே.விஸ்வநாத். "கந்தா' படத்தின் இயக்குநர்.
முதல் படம், என்ன சொல்லப் போறீங்க?
ஒரு துளி புனைவுகூட இல்லாமல் இந்த சினிமாவை எடுத்து முடிச்சிருக்கேன்னு என்னால பொய் சொல்ல முடியாது. சினிமாத் தனங்களுக்குள் வராமலும் கதை சொல்ல பார்த்திருக்கேன். படத்தில் அன்பும், அதிரடியும் கலந்து இருக்கும்.
அம்மாவின் அன்புதான் இந்த உலகத்தில் முதலும் கடைசியுமான உண்மை. அம்மாவுக்கு அன்பை வேறுபடுத்திக் காட்டத் தெரியாது. எல்லா குழந்தைகள் மேலும் ஒரே மாதிரிதான் அன்பு செலுத்துவாங்க. ஆனால் இந்த உண்மை குழந்தைகளுக்குத் தெரியாது. அம்மாவின் நேசத்துக்குப் பின்னால எவ்வளவு விஷயம் இருக்கு. அதே போல் இந்தக் கதையிலும் ஓர் அன்பு இருக்கு. அதை ஆவேசத்தின் பின்னணியில், என் பக்கத்து கலாசாரத்தோடு கலந்து தரப் போறேன்.
கரண் இன்னும் பெரிய வெற்றியைப் பார்க்கவில்லையே?
சினிமாவில் தொடர்ந்து வெற்றியையும் பார்க்காதவர். தோல்வியையும் பார்க்காதவர். இரண்டுமே அவர்கிட்டே இருக்கு. ""கதை நல்லா இருந்தாதான் கமர்ஷியல் படமே பண்ணுவேன்''னு ஒரு நல்ல பாலிஸி வெச்சிருக்கார். ஒரு படம் முடிஞ்சதுக்கு அப்புறம்தான் அடுத்த படம்னு உறுதியா இருக்கார். இந்த இரண்டுமே அவரை நல்ல உயரத்துக்கு அழைச்சிட்டுப் போகும். இந்த ஆபூர்வ ஆர்வத்தோட இருக்கிறவரை நூறு சதவீதம் பயன்படுத்தி இருக்கேன். "கந்தா'வை நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்.
டெல்டா மாவட்ட கேங் வார்தான் கதையாமே?
வாழ்க்கை எல்லோரையும் ஏதோ ஒரு விதத்தில் கலைச்சிப் போட்டு வேடிக்கை பார்க்குது.
பொருள் தேடல், தேவைக்கான தேடல்ன்னு அதிலும் நிறைய பேர் ஓடிக்கிட்டுத்தான் இருக்கோம். அப்படிப்பட்ட இந்த வாழ்க்கையோட சில விநாடிகளைத் தனிப்பட்ட ஏதோ விஷயம் பாதிச்சிக்கிட்டே இருக்கு.
தாதாக்களின் கேங் வார் இன்னமும் டெல்டா மாவட்ட மக்களைப் பயமுறுத்திக்கிட்டுத்தான் இருக்கு. மூட்டை ரவி, மணல்மேடு சங்கர் இருவருக்கும் இடையே ஆரம்பித்த பகைமை. அவர்களின் மூச்சு அடங்கிய பின்னும் பலரை காவு வாங்கிட்டுத்தான் இருக்கு. அப்படிப்பட்ட கலாசாரத்தின் நடுவிலும் ஓர் அன்பை சொல்லப் போறேன். இந்த அன்பு ஓர் ஆணுக்கும், பெண்ணுக்கு இடைப்பட்டதல்ல. ஓர் ஆசிரியருக்கும், மாணவனுக்கும் இடையே உள்ள அன்பு. யாருக்கும் தெரியாத, புரியாத ஒரு விஷயத்தைச் சொல்லி எல்லோரின் கவனத்தையும் ஈர்க்க போறேன்னு என்னால் சொல்லவும் முடியல.
அப்படியென்றால் இதில் காதல் இல்லையா?
மனித இனத்தின் மீது கடவுள் செலுத்திய முதலும், கடைசியுமான விஷயம் காதல்தான். அந்த விஷயம் இந்தப் படத்திலேயும் இருக்கு. வித்தியாசமான ஒரு காதலைச் சொல்ல முயற்சி பண்ணிருக்கோம். மித்ரா அழகான பொண்ணு. அழகும், நடிப்பும் ஒரே இடத்துல இருக்குறது சிலருக்குத்தான் வாய்க்கும். அந்த வகையில் மித்ரா, கந்தாவுக்குப் பக்கபலம்.
கந்தா படத்தோட இன்னொரு ப்ளஸ் இசை. சக்தி. ஆர்.செல்வான்னு புது ஆள். அழகான காதல் மெட்டுக்கள் போட்டிருக்கார். ஆவேசம், அன்பு, காதல் எல்லாம் கலந்த கந்தா உங்களுக்காக காத்துட்டு இருக்கான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...