தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

டால்பின்

நன்றாக பழக்கப்படுத்தப்பட்ட நாய்கள் செய்கின்ற செயல்களைவிட அற்புதமான செயல்களை செய்பவை டால்பின்கள். டால்பின்களின் சர்க்கஸ் வேலைகளைப் பார்த்தவர்கள் வியப்படைவது மட்டுமில்லாமல் இதன் கூர்மையான அறிவுத்திறனும்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 2:17 pm

நன்றாக பழக்கப்படுத்தப்பட்ட நாய்கள் செய்கின்ற செயல்களைவிட அற்புதமான செயல்களை செய்பவை டால்பின்கள். டால்பின்களின் சர்க்கஸ் வேலைகளைப் பார்த்தவர்கள் வியப்படைவது மட்டுமில்லாமல் இதன் கூர்மையான அறிவுத்திறனும் மனிதர்களுக்கு இதன்மேல் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.

கூட்டம் கூட்டமாக வாழும் இவ்வினம் மிக வேகமாக கடலில் நீந்தினாலும் நீருக்குள் அதிக ஆழம் போவதில்லை. பெரும்பாலான டால்பின்களின் முதுகுப்பகுதி கறுப்பாகவும் அடிப்பகுதி வெண்மையாகவும் இருக்கிறது.

கதைகளிலும்,காவியங்களிலும் கூட ஓவியமாக தீட்டப்படும் இந்த இனங்களில் 32 வகைகள் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

சாதாரண டால்பின்கள் 8 அடி நீளம் வரை உள்ளது.உடலானது திமிங்கிலத்தை போல இழைவரி வடிவமுடையதாகவும் அதன் நுனி கூர்மையாகவும் விளிம்பில் குழியுடையதாகவும் உள்ளது.சிறந்த பாலூட்டி இனமான இவற்றின் குட்டி பிறக்கும் போது அதன் வால்ப்பகுதி தான் முதலில் வெளியில் வரும்.

பிரசவமாகும் போது பல பெண் டால்பின்கள் தாயைச் சுற்றி நின்று பாதுகாக்கின்றன. பிறந்தகுட்டியை முதல் மூச்சு விடச் செய்ய நீர்மட்டத்தின் மேல்பகுதிக்கு கொண்டு வருகின்றன. குட்டி தாயிடம் ஒரு வருடம் வரை பால் குடிக்குமாம்.

இதன் ஒலி முனங்குவது போலவும் குரைப்பது போலவும் நம் காதில் கேட்கும். இதன் எதிரொலி மூலம் எதிரில் உள்ள பொருளின் தன்மையை டால்பின் அறிந்து கொள்கிறது. ஒலி எழுப்பிய நேரத்தையும் அந்த ஒலி எதிரொலித்துத் திரும்ப வந்த நேரத்தையும் வைத்து அப்பொருள் இருக்கும் தூரத்தையும் அறிந்து கொள்கிறது.

உணவுகளை வேட்டையாடவும் கூட இந்த ஒலியே டால்பின்களுக்கு பெரிதும் உதவுகிறது.

கப்பல்கள் கடலில் சென்று கொண்டிருக்கும்போது அதனருகே நீந்திச் செல்வதும் இதன் குணங்களில் ஒன்று. கடலில் வாழும் மீன்கள்,நண்டுகள் இவற்றின் உணவாகும். மீனவர்களின் நண்பன் எனப்படும் இந்த அரியவகை உயிரினமான டால்பின் இனம் ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதிகளான தனுஷ்கோடி, வேதாளை, தேவிபட்டிணம்,அழகன்குளம் பகுதிகளிலும் அதிகமாக காணப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.