திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

கறார் சிம்ரன்!

தன்னுடைய 17-வது வயதில் "அபூர்வா' மலையாளப் படத்தை இயக்கி கேரளப் படவுலகினரோடு மற்ற படவுலகினரையும் வியக்க வைத்தவர் இயக்குநர் நித்தின் ராமகிருஷ்ணன், தமிழ் இலக்கியங்களின் மீது அதிக ஈடுபாடு கொண்டவர். அந்த அ

News image
Updated On :27 டிசம்பர் 2023, 3:55 pm

மனோஜ் கிருஷ்ணா

தன்னுடைய 17-வது வயதில் "அபூர்வா' மலையாளப் படத்தை இயக்கி கேரளப் படவுலகினரோடு மற்ற படவுலகினரையும் வியக்க வைத்தவர் இயக்குநர் நித்தின் ராமகிருஷ்ணன், தமிழ் இலக்கியங்களின் மீது அதிக ஈடுபாடு கொண்டவர். அந்த அடிப்படையில் சங்க இலக்கியப் பாடல்களில் வெளிப்பட்ட பரதநாட்டியக் கலை குறித்து "உமா மகேஸ்வரம்' என்ற தமிழ்ப் படத்தை எடுக்கிறார்.

இந்தப் படத்தில் 2008-ம் ஆண்டு உலக அழகிப் போட்டியில் இரண்டாம் இடம் வென்ற பார்வதி ஓமனக்குட்டன்  கதாநாயகியாக அறிமுகமாகிறார். இதில் அவருக்குப் பரதநாட்டியக் குருவாக நடிக்க சிம்ரனிடம் பேசியிருக்கிறார். கதையைக் கேட்ட சிம்ரன் உடனே நடிக்க சம்மதித்துள்ளார். ஆனாலும், தான் இன்னும் முன்னணி நடிகை என்ற பழைய  நினைவிலேயே சம்பள விஷயத்தில் கடும் கறார் காட்டியிருக்கிறார். இதனால் இயக்குநர், நதியாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். தனக்கு வரும் நல்ல வாய்ப்புகளை தகுதிக்கு மீறிய சம்பளம் கேட்டே இழந்து வருகிறார் சிம்ரன் என அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள்கூட வருத்தம் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.