வெற்றியின் ரகசியம் "அ'
ஒரு காலத்தில் ராசியில்லாத நடிகை எனச் சினிமா வட்டாரத்தில் வதந்தி பரப்பப்பட்ட தமன்னாவின் நிலை "அயன்' படத்துக்குப் பிறகு மாறியது. அதையடுத்து வெளிவந்த "கண்டேன் காதலை', "படிக்காதவன்', "பையா' படங்கள் அவருடை


ஒரு காலத்தில் ராசியில்லாத நடிகை எனச் சினிமா வட்டாரத்தில் வதந்தி பரப்பப்பட்ட தமன்னாவின் நிலை "அயன்' படத்துக்குப் பிறகு மாறியது. அதையடுத்து வெளிவந்த "கண்டேன் காதலை', "படிக்காதவன்', "பையா' படங்கள் அவருடைய மார்க்கெட்டை உயர்த்தி தற்போதைய நிலவரப்படி தமிழின் நம்பர் ஒன் நடிகை ஆக்கின.
அதற்குக் காரணம் நியூமராலஜிதான் என்கிறது தமன்னா வட்டாரம். முன்பு தன்னுடைய பெயரை "Th am anna' என்று எழுதிய தமன்னா, ஜோதிட சிகாமணிகளின் அறிவுரைக்கு ஏற்ப ஒரு 'அ' வை இணைத்துக்கொண்டு "Th am ann aa' என மாற்றியிருக்கிறார். இதன் பிறகே அவருடைய சினிமா வாழ்க்கை அமோகமாக இருக்கிறதாம்.
தற்போது "தில்லாலங்கடி', "சுறா' படங்களை முடித்துவிட்ட தமன்னா, கோடை விடுமுறையைக் கொண்டாட அடுத்த வாரம் அமெரிக்காவுக்குப் பறக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...