வாழைப்பூ போன்ற தோற்றம் கொண்டது இந்த சங்கு. பழங்காலத்தில் நமது முன்னோர்கள் வணிகத்துக்கு இந்த சங்குகளைத்தான் அதிகம் பயன்படுத்தினார்களாம்.
அழகுப்பொருளாக பயன்படுத்தப்படும் இச்சங்கின் குணங்கள் குறித்து மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளையின் திட்ட அலுவலர் அ.முருகன் கூறியதாவது..
""மீன்களை மட்டுமே சாப்பிடுவது ஒரு வகை,சிறு சங்குகள்,சிறு சிப்பிகளை சாப்பிடுவது மற்றொரு வகை. சிறு புழு, பூச்சிகளை உண்டு வாழ்வது மூன்றாவது வகை.
இம்மூன்று வகைகளில் மீன்களை மட்டும் சாப்பிடும் வகையான உயிரினத்திற்கு மட்டும் நீரோடாக்சின் என்ற ஒரு வகை விஷ வீரியம் இருக்கிறது.
இந்த உயிரினத்தில் உள்ள ரேடுலா என்ற உறுப்பு மனிதனின் நாக்கு போன்றே சுவையை உணரப் பயன்படுகிறது. ஊசி போலவே இருக்கும் இந்த ரேடுலா கண்களுக்குத் தெரியவில்லை என்றாலும் இதன் மூலம் தான் பிற உயிரினங்களின் மீது விஷத்தை செலுத்தி கொல்கிறது.
இவை மீனவர்களைக் கொட்டினால் இறந்து விடுவார்கள் என்பது அவர்களுக்கும் தெரியாமல்தான் உள்ளது. சுமார் 20 வருடங்கள் வரை உயிர்வாழும் இந்த ஜீவன்கள் கடலுக்கு அடியில் பவழப் பாறைகள் உள்ள பகுதிகளில்தான் அதிகமாக காணப்படுகின்றன.
வாழைப்பூ சங்கிலிருந்துதான் உடல் வலியை குணப்படுத்தும் பிரெய்ல்ட் என்னும் மாத்திரை தயாராகிறது. இதன் மருத்துவக் குணங்கள் குறித்து பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகம்,தேசிய உயிரியல் ஆராய்ச்சி மையம் ஆகியனவும் பல்வேறு ஆராய்ச்சிகளைச் செய்து வருகின்றன. ஒரு தடவை சுமார் 20ஆயிரம் முட்டைகளை இட்டாலும் இதன் எண்ணிக்கை என்னவோ வெகுவாக குறைந்து கொண்டேதான் போகிறது. இவ்வுயிரினத்தில் குளோரி ஆப் இந்தியா என்ற வகை உயிரினம் ஒன்றின் விலை மட்டுமே ரூ.30ஆயிரம் வரை விற்பனையாகிறது. சிறந்த அழகுப் பொருளாகவும் பயன்படுத்தப்படும் இந்த அரியவகை கடல்வாழ் உயிரினம் மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் தான் அதிகமாக உள்ளன.
பெண் சங்கின் அடிப்பகுதியில் மவுல்ட்டிங் என்ற சுரப்பி இருக்கும். ஆண் இனத்திற்கு அவை இருப்பதில்லை. ஆணுக்கும் பெண்ணுக்கும் வெளித்தோற்றத்தில் எவ்வித பேதமும் இல்லை என்றாலும் இச்சுரப்பியை வைத்துத்தான் அது எந்த இனம் என்று அறிந்து கொள்ள முடிகிறது.
இல்லையேல் இரண்டாக வெட்டினால்தான் எந்த இனம் எனத் தெரிய வரும். முதுகெலும்பில்லாத இந்த உயிரினம் முதுகெலும்பு உள்ள உயிரினங்களையே பெரும்பாலும் உணவாக்கி உயிர்வாழும் அபூர்வ ஜீவன்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஐபிஎல், பிபிஎல், பிஎஸ்எல் டி20 தொடர்களில் சதம் அடித்த ஒரே வீரராக ஸ்டீவ் ஸ்மித் சாதனை!

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 89.93% வாக்குப்பதிவு- நேரலை

ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த 10 இந்திய கப்பல்கள்! - மத்திய அரசு அறிவிப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


