திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

கோமாளி மீன்கள்!

தனுஷ்கோடி முதல் கன்னியாகுமரி வரை பரந்துள்ள இந்திய எல்லைக்கு உட்பட்ட கடற்பரப்பே மன்னார் வளைகுடா கடல் பகுதியாகும். இதன் 10,500 சதுர கி.மீட்டர் பரப்பளவில் சுமார் 3600 வகையான அரியவகை கடல்வாழ் உயிரினங்கள்

News image
Updated On :27 டிசம்பர் 2023, 2:50 pm

சி.வ.சு. ஜெகஜோதி

தனுஷ்கோடி முதல் கன்னியாகுமரி வரை பரந்துள்ள இந்திய எல்லைக்கு உட்பட்ட கடற்பரப்பே மன்னார் வளைகுடா கடல் பகுதியாகும். இதன் 10,500 சதுர கி.மீட்டர் பரப்பளவில் சுமார் 3600 வகையான அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் காணப்படுகின்றன. இதுபோன்ற உயரிய பல்உயிரின அடர்த்தி இந்திய கடல்பரப்பில் வேறு எங்கும் காணப்படுவதில்லை. இவற்றுள் பெரும்பாலானவை உலகத்திலேயே வேறு எங்கும் காண இயலாத மிக அரியவகை உயிரினங்களாகும்.

இதிலுள்ள பலவகை மீன் இனங்களில் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்க கூடிய மீன் இனங்களில் ஒன்று கோமாளி மீன்.

கோமாளி போன்ற தோற்றம் இருப்பதால் இதைக் கோமாளி மீன் என்றும் ஆங்கிலத்தில் கிளவுன் ஃபிஷ் என்றும் அழைக்கிறார்கள். கடலுக்கு அடியில் வளரும் கடல் தாமரைக்குள் மட்டுமே வாழும் தன்மையுடையது என்பதால் இதற்கு தாமரைக்காத்தான் என்ற மற்றொரு பெயரும் உண்டு.

கடலில் கடல்புல்லும் சகதியும் அதிகம் உள்ள இடத்தில் கடல் தாமரைகளில் மட்டுமே வசிக்கும்.

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் செபே கிளவுன் என்ற வகை மீன் இனம் இருக்கிறது. இதன் உடல் கருப்பாகவும் உடலில் இரு அகண்ட வெள்ளைக் கோடுகளும் சிவப்பு நிறத்தில் வாலும் இருக்கிறது.

லட்சத்தீவு, அந்தமான் பகுதிகளுக்கு உட்பட்ட கடலில் பெர்குலா கிளவுன்,பயர் கிளவுன் என்ற இரு இனங்கள் காணப்படுகின்றன. இவை ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.

கடலுக்கு அடியில் பலவகையான கடல் தாமரைகள் இருக்கின்றன. இவற்றில் கார்பெட் ஹனிமூன், டென்டேக்கிள் ஹனிமூன் எனவுள்ள இந்த இரண்டு வகை கடல் தாமரைகளில் மட்டுமே இம்மீன்கள் வசிக்கின்றன. "நீமோ' என்ற ஆங்கிலப்படத்தில் இவை கதாநாயகர்களாகக் காட்டப்பட்டதால் இம்மீன் மிகவும் பிரபலமடைந்தது.   இந்த மீனை பலரும் வீடுகளில் வளர்க்க விரும்புகிறார்கள்.

இம்மீன்களில் ஒன்றை பிடித்துக் கொடுக்கும் மீனவருக்கு ஒரு மீனுக்கு ரூ.15 முதல் ரூ.20 வரை விலைக்கு வாங்கிக் கொள்கின்றனர். வீட்டில் வைத்து வளர்க்க விரும்புவோருக்கு ஒரு மீன் ரூ.75 முதல் ரூ.100 வரை விற்பனையாகிறது. இவற்றைத் தொட்டியில் வைத்து வளர்க்க கடல் தாமரையையும் சேர்த்து விலைக்கு வாங்க வேண்டும்.

கடல் தாமரையில் கார்பெட் ஹனிமூன் என்னும் இனம் ரூ.25க்கு மீனவரிடம் வாங்கி ரூ.200 வரை விற்பனை செய்கிறார்கள். மற்றொரு வகை தாமரையான டென்டேக்கிள் ஹனிமூன் ஒன்று ரூ.100க்கு வாங்கி ரூ.400 வரை விற்பனையாகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் உள்ள மத்திய கடல்வள மீன் ஆராய்ச்சி நிலையமும் கடலூர் பரங்கிப்பேட்டை அண்ணாமலை பல்கலைக்கழக கடல்வாழ் உயிரியல் உயர்ஆய்வு மையமும் இம்மீன் வளர்ப்புத் தொழில்நுட்பத்தை கற்றுத் தருகிறார்கள்.

அண்மையில் ராமநாதபுரத்தில் உள்ள மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளை மூலம் மண்டபம் மத்திய கடல்வள மீன் ஆராய்ச்சி நிலையத்தில் 20 பேருக்கு இம்மீன் வளர்ப்பு பயிற்சி வகுப்பு துவக்கப்பட்டது. பயிற்சியினை அறக்கட்டளையின் இயக்குநர் அருணாபாசு சர்க்கார் துவக்கி வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.