திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

நெல்−ல் முளைத்த கதை!

கீழவெண்மணி சம்பவத்தை இன்னும் பல பேர் ஜாதி பிரச்னையாகத்தான் பார்க்குறாங்க. ஆனால் அதுக்குள்ளே இன்னும் ஓர் உண்மை மறைஞ்சி கிடக்கு. அது இப்போ துளிர் விட்டு, விட்டு ஆலமரமா வளர்ந்து நிற்குது.  நிலச் சொந்தக்க

News image
Updated On :27 டிசம்பர் 2023, 6:36 pm

ஜி. அசோக்

கீழ வெண்மணி சம்பவத்தை இன்னும் பல பேர் ஜாதி பிரச்னையாகத்தான் பார்க்குறாங்க. ஆனால் அதுக்குள்ளே இன்னும் ஓர் உண்மை மறைஞ்சி கிடக்கு. அது இப்போ துளிர் விட்டு, விட்டு ஆலமரமா வளர்ந்து நிற்குது.  நிலச் சொந்தக்காரர்களுக்கும் கூலி விவசாயிகளுக்கும் இடையே நடந்த அந்தப் பிரச்னைக்கு இன்னும் முடிவே இல்லை.  கீழ வெண்மணி போல் தஞ்சையைச் சுற்றியிருக்கிற ஆயிரம் ஆயிரம் கிராமங்களில் இன்னும் புதர் போல நிறைய பிரச்னைகள் மண்டிக் கிடக்கு. நானும் அந்த மண்ணை, மக்களைச்  சார்ந்தவன் என்பதால் இதைச் சினிமா மூலம் பேசணும்னு வந்திருக்கேன். மீடியாக்கள் சப்போர்ட் இல்லாத படம். நீங்கதான் சார் ஹெல்ப் பண்ணணும்.'' பக்குவமாகப் பேசுகிறார் சிவசங்கர். "நெல்லு' பட இயக்குநர்.

""சந்தோஷம், துக்கம்ன்னு எல்லாம் கலந்து பயணிக்கிற ஒரு கப்பல் எப்படிக் கரை சேராமல் முழ்குகிறது என்பதுதான் "டைட்டானிக்' படத்தின் கதை. ஆனால் அந்தக் கப்பலைவிட காதல் ஜோடியின் தவிப்புதான் இப்போதும் ஞாபகத்துல நிக்குது. அது போல்தான் இதுவும். ஆயிரம் பேரைச் சுற்றி சுழன்று அடிக்கிற ஒரு பிரச்னை. அதன் பின்னணியில் ஒரு காதல். "டைட்டானிக்' படம் போல் இந்தக் காதலும் உங்களை டிஸ்டர்ப் பண்ணும்'' என்றும் சொல்கிறார் சிவசங்கர்.

கீழவெண்மணி பிரச்னை நம் வரலாற்றில் முக்கியமானது. அதைச் சொல்லும்போது பல பிரச்னைகள் வருமே?

நிச்சயம் அப்படி இல்லை. எல்லோரும் அப்படித்தான் நினைச்சு கேட்குறாங்க. எந்த இடத்திலும், நேரத்திலும் ஜாதி சாயம் பூசலை. ஆங்காங்கே போராட்டத்தைச் சொல்லியிருக்கேன். அதுவும் கதைக்குத் தேவை என்பதால்.  உழைப்புக்கேற்ற கூலி கொடுன்னு கேட்கிற ஒரு கூட்டத்தின் அழுகை, சந்தோஷம்ன்னு ஃப்ரேமுக்கு ஃப்ரேம் நிறைஞ்சி இருக்கும். நிறைய சமரசங்கள் செய்துதான் இது இப்போ முடிஞ்சிருக்கு. பல வருஷமா உழைச்சிருக்கேன். ஆலோசனைகள், ஆய்வுகள்னு நிறைய நடந்திருக்கு. ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குப் பின்புதான் நாம இன்னும் சுதந்திரம் இல்லாமல் இருக்கோம்னு பல பேருக்குத் தோணுச்சு. ஆனால் அதுக்கு முன்னாடியே நிறைய பேர் சுதந்திரத்துக்குப் போராடியிருக்காங்க. எப்போதோ எங்கோ நடக்கும் ஒரு விஷயம்தான் இது நமக்கும் நடந்து விடும்ன்னு யோசிக்க வைக்குது.  இதுவும் அப்படி யோசிக்க வைக்கும். எதுவுமே உறுத்தாது.

இதைப் பீரியட் ஃபிலிமாகத்தானே எடுத்திருக்க முடியும்?  

1968-ல் நடந்த ஒரு சம்பவம். அந்தச் சம்பவத்தின் அடிச்சுவடு இன்னும் நாகை மாவட்ட கிராமங்களில் உறைஞ்சு கிடக்கு. ஏன் எதுக்குன்னு அவங்களுக்குள்ளே இன்னும் கேள்வி கேட்டுக்கிட்டு இருங்காங்க. சிலரைச் சந்தித்து பேசினேன். ஆச்சரியமான தகவல்கள் தந்தாங்க. புரட்சி, காதல்ன்னு மட்டும் இதை நினைச்சு பார்க்க வேண்டாம்.  விவசாயம் அழிஞ்சு போச்சு. அதைச் செய்ய ஆள்களே இல்லை. யாராவது காப்பத்துங்கன்னு கூப்பாடும் இதுல இருக்கு.  கிராமத்து இளைஞர்கள் எல்லாம் பிழைப்புத் தேடி சென்னைக்கும் மற்ற நகரங்களுக்கும் போய் விட்டார்கள். அறிவியல் வளர்ச்சியில் செல்போன் கூட நூறு ரூபாய்க்குக் கிடைக்கலாம். ஆனால் நமக்கெல்லாம் சோறு போடுகிற விவசாயம் எத்தனை கிலோன்னு கேட்க வர்ற  தலைமுறைக்கு என்ன பதில் வெச்சிருக்கோம்? இந்த தலைமுறையோடு விவசாயம் அழிய போகுது. தயவு செய்து விவசாயம் பக்கம் கவனம் செலுத்துங்கன்னு சொல்லவும் போறேன்.

"16 வயதினிலே' தொடங்கி "புதிய வார்ப்புகள்' வரை பார்த்து விட்டு இயக்குநர் எல்.வி.பிரசாத் தன்னை உதவி இயக்குநராக சேர்த்து கொள்ள முடியுமா? எனக் கேட்டதை தன் சினிமா வாழ்வின் உச்சபட்ச கௌரவமாக நினைக்கிறார் பாரதிராஜா. 1986-ல் தாஷ்கண்ட் பட விழாவில் "முதல் மரியாதை' படத்தைத் திரையிட்டார்கள். சப் டைட்டில் போட்டும் மக்கள் படத்தைப் புரிந்து கொள்ள சிரமப்பட்டார்கள்.அங்குள்ள பெண் ரஷ்ய மொழியில் ரன்னிங் கமெண்ட்ரி கொடுக்க, பட விழாவுக்குச் சென்றிருந்த ராஜ்கபூர்  பாரதிராஜாவிற்கு மொழி பெயர்ப்பு செய்தார். நெகிழ்ச்சியில் நனைந்தன இயக்குநரின் இமைகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.