கடலின் மேல்பகுதிக்கும் அடிப்பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் கூட்டம் கூட்டமாக நீந்தித்திரியும் உயிரினமே இந்தியன் மேக்ரல். இந்தோ-பசிபிக் கடல்கள் அனைத்திலும் வாழும் இவ்வகை மீன் இனங்கள் அயிலை மீன் என்றும் அகலை மீன் என்றும் அழைக்கப்படுகின்றன.
ஹிந்தியில் பங்கடி என அழைக்கப்
படும் இம்மீனைப் பற்றி ராமநாதபுரத்தில் உள்ள மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின தேசியக் காப்பகத்தின் கடல் உயிரியலாளர் ர.செந்தில்குமார் கூறியதாவது..
""உலகிலேயே இந்தியாவில் அதிகமாக பிடிக்கப்படுவதாலும், அளவுக்கு அதிகமான சுவையாகவும் இருக்கிற காரணத்தால் சுதந்திரம் வாங்கிய சில வருடங்களிலேயே நம் நாட்டில் தனித்துவம் மிக்க கடல்மீனாக கருதப்பட்டு தேசிய கடல் மீனாக அறிவிக்கப்பட்டது.
கடலில் லட்சக்கணக்கில் கூட்டம், கூட்டமாக வாழும் இந்த மீன் இனம் குறைந்த வெப்பநிலையில் மட்டுமே உயிர்வாழும் தன்மையுடையது. ராஜ்ரலிஜர் கானர்குட்டா என்பது இதன் விலங்கியல் பெயர்.
மார்ச் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை லட்சக்கணக்கான முட்டைகளை பல கட்டங்களாக இட்டு பல்கிப் பெருகி விடுகின்றன. முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளிவரும் போது சைவ உணவுகளையும் (தாவர நுண்ணுயிரிகள்) சிறிது வளர்ந்த பிறகு அசைவ உணவுகளையும்(விலங்கு நுண்ணுயிரிகள்) தின்று உயிர் வாழ்கின்றன.
4வருடங்கள் வரை உயிர்வாழும் இந்த உயிரினம் 35 செ.மீ.வரை வளரும். கடற்கரையிலிருந்து 4 கி.மீ முதல் 10 கி.மீ. வரையுள்ள கடல் பகுதியில்தான் இந்த மீன்கள் கூட்டம் கூட்டமாகக் காணப்படுகின்றன.
இதன் இருப்பிடங்களை அறிந்த மீனவர்கள் ஜி.பி.எஸ். என்ற கருவியின் உதவியுடன் அந்த இடத்தை அடைந்து இரு படகுகளின் உதவியுடன் பை போன்று இருக்கக்கூடிய தங்கு வலையால் அதன் கூட்டத்தை கூண்டோடு சுற்றி வளைப்பார்கள்.
அப்போது ஓரிரண்டு மீனவர்கள் கடலில் இறங்கி மீன்களை விரட்டி வலையின் உள்ளே புக வைத்து அனைத்தும் வலைக்குள் சென்றவுடன் கடலுக்குள் இருக்கும் மீனவர்கள் சில சமிக்ஞைகள் மூலம் மீன்பிடி படகில் இருப்பவர்களுக்கு தெரிவித்தவுடன் அவர்கள் உடனடியாக செயல்பட்டு வலையை இழுக்கும் போது அது ஒரு சுருக்குப் பை போல சுருண்டு அத்தனை மீன்களையும் உள்வாங்கி விடும்.
இவற்றில் பெரிய மீன்களைப் பிடிக்க மிதவை உயிரினங்கள் சிலவற்றை கடலில் மிதக்க விட்டு மிதவை வலைகள் மூலமாக தானாக வந்து சிக்கிக் கொள்ளும் வகையில் பிடிக்கிறார்கள்.
பிடிக்கப்படும் மீன்கள் பதப்படுத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு கேன்களில் அடைக்கப்பட்டு ஏற்றுமதியாகிறது. இந்தியாவிற்கு அடுத்தபடியாக பிலிப்பைன்ஸ் நாடும் இதனைப் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. இந்தியாவிற்கு மிகுந்த அன்னியச் செலாவணியை ஈட்டித்தரும் இம்மீன் இனம் குறித்து நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியதும் அவசியம். கொச்சியில் உள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி மையமும் இம்மீன் இனங்கள் குறித்து விரிவான ஆராய்ச்சியையும் மேற்கொண்டுள்ளது.
தேசியக் கடல் மீன் இனத்தின் பெயர் குறித்து பொது அறிவுக் கேள்விகள் கேட்கப்படும் தேர்வுகளில் பலரும் இதன் பெயர் தெரியாமல் பதிலளிக்காமல் விட்டு விடுகின்றனர்.
தேசிய விலங்கு,தேசியப் பறவை,
தேசிய மலர் என்ற வரிசையில் தேசிய கடல் மீனான இந்தியன் மேக்ரல் குறித்தும் அறிந்து கொள்வோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடும்பத்துடன் வாக்களித்த நடிகை ரம்யா பாண்டியன்!
தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! மாவட்டவாரியாக விவரம்...

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 78.77% வாக்குப்பதிவு- நேரலை

மேற்குவங்க பாஜக எம்எல்ஏ கார் மீது கற்கள் வீசித் தாக்குதல்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


