அஸினைக் காக்குமா காக்க காக்க?
தமிழில் வெற்றி பெற்ற "காக்க காக்க' படம், தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் பெரிய வெற்றியைப் பெற்றது. தற்போது இந்தப் படம் ஹிந்தியில் ரீமேக் ஆகிறது. இதில் ஜான் ஆப்ரஹாம் கதாநாயகனாக நடிக்கிறார். கதாந


தமிழில் வெற்றி பெற்ற "காக்க காக்க' படம், தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் பெரிய வெற்றியைப் பெற்றது. தற்போது இந்தப் படம் ஹிந்தியில் ரீமேக் ஆகிறது. இதில் ஜான் ஆப்ரஹாம் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நடிக்க பலரையும் பரிசீலித்து இறுதியில் அஸினைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
சல்மான்கானுடன் நடித்த "லண்டன் ட்ரீம்ஸ்' எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாத சூழ்நிலையில் தமிழில் கவனம் செலுத்தத் தொடங்கினார் அஸின். இந்நிலையில் மீண்டும் கிடைத்துள்ள ஹிந்தி வாய்ப்பைப் பயன்படுத்தி பாலிவுட்டில் தன்னை முன்னணி நடிகையாக நிலைநிறுத்திக் கொள்ள முயற்சி மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், அடுத்த ஆண்டு முதல்... ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகவுள்ள கொச்சின் அணியின் சிறப்பு விளம்பரத் தூதுவராகவும் நியமிக்கப்படவுள்ளார் அஸின்.
காப்பி அடிக்க முடியாத நடிப்பு!
அண்மையில் தனது பிறந்த நாளைக் கொண்டாடிய பிரசாந்திடம் ""உங்களைப் படங்களில் பார்த்து நீண்ட காலமாகி விட்டதே? ஏன் இந்த இடைவெளி?'' என்று கேட்டபோது...
""இது நான் வேண்டி விரும்பி எடுத்துக்கொண்ட இடைவெளி. என் குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட எதிர்பாராத சிக்கலும் இதற்கு ஒரு காரணம். ஆனால் அதனாலெல்லாம் நான் துவண்டுவிட வில்லை. இந்த நாளிலிருந்து நான் மீண்டும் புதிதாகப் பிறந்ததாக உணருகிறேன். இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் என்னுடைய திரைவாழ்க்கையில் முக்கியமான ஆண்டுகளாக இருக்கும்.
இந்த ஆண்டு "மம்பட்டியான்' படம் வெளிவருகிறது; இதே ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் கலைஞர் கருணாநிதியின் கதை, வசனத்தில் நான் நடிக்கும் "பொன்னர் சங்கர்' படம் வெளியாகிறது. இரண்டு படங்களையும் என்னுடைய தந்தைதான் இயக்குகிறார். இரண்டு படங்களிலும் கேரக்டர்களுக்குத் தகுந்த "கெட்}அப்'போடு நடிக்கிறேன்.
தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளாக நடித்து வந்தாலும் இப்போதும் என்னை இளமையான புதுமுகமாகத்தான் உணருகிறேன். நான் யார் பாணியையும் பின்பற்றவில்லை. எனக்கென்று தனியாக எந்த ஸ்டைலும் இல்லை. கேரக்டர்களுக்கு ஏற்றவாறுதான் நான் நடித்து வருகிறேன். அதனால் என்னுடைய நடிப்பை யாரும் காப்பி அடிக்க முடியாது'' என்றார்.
மூன்றாவது இயக்குநருக்கு முன்னுரிமை!
"பையா' படத்தில் நடித்த கார்த்தியிடம், ""உங்களை இயக்கிய அமீர், செல்வராகவன், லிங்குசாமி ஆகியோர் ஒரே நேரத்தில் கால்ஷீட் கேட்டால் யாருக்கு முன்னுரிமை தருவீர்கள்?'' என்று கேட்டபோது...
""பருத்தி வீரன்' படத்துக்காக இரண்டு ஆண்டுகள் செலவிட்டேன்; "ஆயிரத்தில் ஒருவன்' படத்துக்காக இரண்டு ஆண்டுகள் செலவிட்டேன்.
ஆனால் "பையா' படத்துக்கு அந்த அளவுக்கு நேரம் ஆகவில்லை. இப்போதுள்ள சூழ்நிலையில் ஒரு படத்துக்கு இரண்டு, மூன்று ஆண்டுகள் ஒதுக்கும் அளவுக்குப் பொறுமை இல்லை. ஓர் ஆண்டுக்கு இரண்டு, மூன்று படங்களை வெளியிடத்தான் நினைக்கிறேன்.
அதனால் என் முதல் சாய்ஸ் இயக்குநர் லிங்குசாமிக்கே! அதற்காக மற்றவர்களை ஒதுக்குவதாக நினைத்துவிடக் கூடாது. வயது இருக்கும்போதே பல படங்களில் வித்தியாசமாக நடித்து என்னை நிலைநிறுத்த விரும்புவதுதான் காரணம்'' என்றார்.
என் மொழி இசை மொழி!
கடந்த மார்ச் 31}ம் தேதி பத்ம விருதுகள் பெற்றோருக்கு தில்லியில் வெகு விமரிசையாகப் பாராட்டு விழா கொண்டாடி சிறப்பித்தது தினமணி நாளிதழ். அந்த நன்னாளில் விழா மேடையில் அமைதியே உருவாக அமர்ந்திருந்த இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானைச் சிறார்கள் முதல் பெரியோர்கள் வரை பலரும் வயது வித்தியாசம் இன்றி ஆட்டோகிராஃப் கேட்டு முற்றுகையிட்டனர். எந்த ஒரு தயக்கமும் கர்வமும் இல்லாமல் தன்னை நெருங்கிய அனைவருக்கும்
அன்போடு ஆட்டோ
கிராஃப் இட்டார்... ஆங்கிலத்தில்! அருகே அமர்ந்திருந்த தினமணி ஆசிரியர் இதைக் கண்டு.... ""ரஹ்மான் என்ன நீங்களுமா?'' என வினவ... அப்படி என்ன தவறு செய்துவிட்டோம் என்ற சிந்தனையுடன் ""என்ன சார்..?'' என ஏ.ஆர்.ரஹ்மான் தயங்க ""ஏ.ஆர்.ரஹ்மான் என ஆங்கிலத்தில் ஆட்டோகிராஃப் இடுகிறீர்களே! தமிழின் பெருமையை, தமிழனின் பெருமையை உலகமெல்லாம் அறியச் செய்த தாங்கள் தமிழிலேயே ஆட்டோகிராஃப் போடலாமே... அது தமிழுக்கு சிறப்பாக அமையுமல்லவா'' என்றார் ஆசிரியர்.
உடனே ஏ.ஆர்.ரஹ்மான், ""உண்மைதான் சார்... ஆனால் தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள்; நான் எழுதியே நீண்ட காலம் ஆகிவிட்டது; அப்படியே அவசியம் ஏற்பட்டாலும் இ}மெயில், இன்டர்நெட் போன்றவற்றைத்தான் பயன்படுத்துகிறேன். அவற்றிலும் பெரும்பாலும் இசையைப் பற்றித்தான் பகிர்ந்துகொள்கிறேன். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி என்பதையெல்லாம் தாண்டி இசையைத்தான் நான் எனது மொழியாகக் கருதுகிறேன். ஆனாலும் நீங்கள் கூறியதை நான் கருத்தில் கொண்டு இனி தமிழில் ஆட்டோகிராஃப் இடுகிறேன்'' என்றார் ஏ.ஆர்.ரஹ்மான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...