10 பாடகர்களின் பாடல்!
மம்முட்டி, அர்ஜுன், சினேகா நடித்து வந்த "அறுவடை' படத்தின் பெயர் "வந்தேமாதரம்' என மாற்றப்பட்டுள்ளது. இதில் தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் "நம் நாடு ஒரு பூக்காடு...' என்ற உணர்ச்சிகரமான பாடலை வைரமுத்த


மம்முட்டி, அர்ஜுன், சினேகா நடித்து வந்த "அறுவடை' படத்தின் பெயர் "வந்தேமாதரம்' என மாற்றப்பட்டுள்ளது. இதில் தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் "நம் நாடு ஒரு பூக்காடு...' என்ற உணர்ச்சிகரமான பாடலை வைரமுத்து எழுதியிருக்கிறார். ஹரிசரண், விஜய் ஜேசுதாஸ், நரேஷ் அய்யர், ஹரீஷ் ராகவேந்திரா, கிரிஷ் ஆகிய ஐந்து பாடகர்கள் சின்மயி, சுசித்ரா, ஸ்ரீலேகா பார்த்தசாரதி, மாதங்கி, பாப் ஷாலினி ஆகிய ஐந்து பாடகிகள் என மொத்தம் 10 பேர் இந்தப் பாடலைப் பாடியுள்ளனர். "இத்தனை பேர் இணைந்து பாடினால்தான் இதுபோன்ற பாடல் கதையோட்டத்துடன் ஒட்டி ரசிகர்களைக் கவரும்; அதனால்தான் இவர்கள் அனைவரையும பாட வைத்தேன்'' என்கிறார் இசையமைப்பாளர் இமான்.
15 வயது இசையமைப்பாளர்!
ராமராஜன் நடித்த "ரயிலுக்கு நேரமாச்சு', படத்தை இயக்கிய பாரதிமோகன் "வள்ளி விலாஸ் நாடக சபா' என்ற பெயரில் புதிய படத்தை இயக்குகிறார். புதுமுகங்கள் விஜய்பிரகாஷ், ரோஷிணி அறிமுகமாகும் இந்தப் படத்தில் ராகுல் பி.கக்கானி என்ற 15 வயது டீன்}ஏஜ் இசையமைப்பாளர் அறிமுகமாகிறார். மு.ரா.சத்யா தயாரிக்கும் இந்தப் படத்தில் அறிமுகமாவதன் மூலம் கோலிவுட்டின் மிகக் குறைந்த வயது இசையமைப்பாளர் என்ற பெயரைப் பெற்றிருக்கிறார் ராகுல் பி.கக்கானி.
80 வயது புதுமுகம்!
நடிகர் ஆர்யா, "த ஷோ பீப்புள்' என்ற பட நிறுவனம் சார்பில் "படித்துறை' என்ற படத்தை சொந்தமாகத் தயாரித்து வருகிறார். நாஞ்சில்நாடன் எழுதிய "எட்டுத் திக்கும் மதயானை' என்ற நாவலைத் தழுவி உருவாகும் இந்தப் படத்தை சுகா இயக்குகிறார். இந்தப் படத்தில் 80 வயது முதியவர் ஒருவர் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் சர்வ சாதாரணமாக நடித்து வரும் அந்த முதியவர், கடந்த 40 ஆண்டுகளாக சினிமாவே பார்க்காதவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...