டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

விடுகதைகள்

கல்லைக் கடித்தவனுக்கு கடைவாய் வரை இனித்தது. அது என்ன?

News image
Updated On :28 ஜூன் 2026, 12:00 am IST

1.கல்லைக் கடித்தவனுக்கு கடைவாய் வரை இனித்தது. அது என்ன?

2. இரவலுக்குக் கிடைக்காது. இரவில் கிடைக்கும். அது என்ன?

3.கல், மண்ணால் கட்டாத வீடு. காற்றில் ஆடும் வீடு. அது என்ன?

4.காடெல்லாம் சுற்றிவரும் கறுப்பழகி, கான மழையில் காது குளிர வைப்பார். அவள் யார்?

5.பூவிலே பிறக்கும். நாவிலே சுவைக்கும். அது என்ன?

6.இருபுறமும் பாதை. இடையிலே தூண். அது என்ன?

7.பள்ளிக்குப் போக மாட்டான். பாடம் படிக்க மாட்டான். சரியாகக் கணக்குகளைச் சொல்வான். அவன் யார்?

8.ஒட்டியிருந்த மகளை விட்டுப் பிரிந்து வந்தேனே, அது என்ன?

9.சிவந்தால் விழுவான். விழுந்தால் மணப்பான். அது என்ன?

10.காயும் நானே. கனியும் நானே. கல்லடிப்பட்டால் இரண்டாவேன். நான் யார்?

11.பார்க்க முடிந்த நூல் நான். தைக்க முடியாத நூல் நான். நான் யார்?

12. என்னை அடித்தாலும் சரி, உதைத்தாலும் சரி, நான் அழ மாட்டேன். நான் யார்?

13. ஆயிரம் கதைகள் சொல்வேன். ஆயிரம் கவிதைகள் எழுதுவேன். வெள்ளைத் தாளிலேயே நாட்டியமாடி, வேண்டிய ஞானம் கொட்டுவேன். நான் யார்?

விடைகள்:

1.கல்கண்டு, 2. தூக்கம், 3.தூக்கணாங்குருவி, 4. குயில், 5.தேன், 6.மூக்கு, 7.கால்குலேட்டர், 8. உமி, நெல், 9.பனம்பழம், 10.தேங்காய், 11.சிலந்தி வலை, 12. பந்து, 13. பேனா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.