திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தெரியுமா?

வாடிகனில் முக்கிய ரகசிய ஆவணக் காப்பகம் உள்ளது.

News image
Updated On :2 பிப்ரவரி 2026, 10:44 pm IST

ஆவணக் காப்பகம்

வாடிகன்: வாடிகனில் முக்கிய ரகசிய ஆவணக் காப்பகம் உள்ளது. இங்கு போப்ஆண்டவர்களின் தனிப்பட்ட ஆவணங்களும், இயேசுபிரானின் முந்தைய, பிந்தைய கால நிகழ்வுகள் குறித்த தகவல்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகளும் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

விதைகள் காப்பகம்

நார்வே: உலகில் திடீரென இயற்கைப் பேரழிவு ஏற்பட்டாலும், மூன்றாவது உலகப்போர் மூண்டு, ஏதோ ஒரு பேரழிவு ஏற்பட்டு, அதனால் பயிர்கள் அனைத்தும் அழிந்து விட்டால், உணவுக்கு எங்கே போகும் மனித இனம்? உலக மக்களின் எதிர்கால நலன் கருதி நார்வே நாடு விதைகள் காப்பகம் அமைத்துள்ளது.

நார்வே நாட்டின் தீவுக் கூட்டத்தில் இருக்கும் ஸ்பிட்ஸ் என்ற தீவில் ஆர்டிக் பனிமலையில் 130 அடி உயரத்தில், எவரும் எளிதில் அணுக முடியாத இடத்தில் விதைகள் காப்பகம் அமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வகையிலும் 400 முதல் 500 வரையில் மாதிரிகள் சேமிக்கப்பட்டுள்ளது.

உலகில் தற்போது விளையும் அனைத்து வகைப் பயிர்களின் 8,40,000 வகையான தரமான விதைகள், அனைத்தும் விதைகள் காப்பகத்தில் பாதுகாப்பாகச் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.

ராணுவக் காப்பகம்

அமெரிக்கா: அமெரிக்காவின் நெவாடா மகாணத்தில் லாஸ்வேகாஸ் என்ற இடத்திலிருந்து 130 கிலோ மீட்டர் தொலைவில் ஏரியா 51 என்கிற ராணுவத் தளத்தில் மிக ரகசியங்களின் காப்பிடம் உள்ளது. இங்கிருந்துதான் அமெரிக்காவின் உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. பல ரகசியமான வேலைகளைச் செய்கிறது. இங்கே அமெரிக்க நாட்டின் அதி ரகசியமான ஆவணங்கள் அனைத்தும் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.