தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மிக்ஸட் பருப்பு சுண்டல்

கடலைப் பருப்பு, வேர்க்கடலை, கொள்ளு மூன்றையும் உப்பு சேர்த்து குக்கரில் ஒரு விசில் வரும் வரை வைத்திருந்து கீழே இறக்க வேண்டும்.

News image

மிக்ஸட் பருப்பு சுண்டல்

Updated On :4 அக்டோபர் 2025, 6:31 pm

தேவையான பொருள்கள்:

முளைகட்டிய கொள்ளு, கடலைப்

பருப்பு, வேர்க்கடலை- தலா இரண்டு மேசைக்கரண்டி

சிவப்பு மிளகாய் -4

தேங்காய்த் துருவல் -மூன்று தேக்கரண்டி

கடுகு உளுத்தம் பருப்பு- ஒரு மேசைக்கரண்டி

உப்பு, எண்ணெய் -தேவையான அளவு

எள் -இரண்டு மேசைக்கரண்டி

செய்முறை:

கடலைப் பருப்பு, வேர்க்கடலை, கொள்ளு மூன்றையும் உப்பு சேர்த்து குக்கரில் ஒரு விசில் வரும் வரை வைத்திருந்து கீழே இறக்க வேண்டும். எள், காய்ந்த மிளகாய் வறுத்து பொடிக்க வேண்டும்.

வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து கடுகு தாளித்து, தேங்காய் பூ போட்டு பிரட்டி வேக வைத்துள்ள பருப்பில் உள்ள நீரை வடித்து விட்டு தேங்காய்த் துருவல் கலந்து சுருள கிளறிபின் அடுப்பில் இருந்து இறக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.