/

தெரியுமா?

அமெரிக்காவில் காற்று மாசு அதிகமுள்ள முதல் ஐந்து நகரங்களும் கலிபோர்னியா மாகாணத்திலேயே உள்ளன.

News image
Updated On :25 ஜனவரி 2025, 6:30 pm

கோட்டாறு கோலப்பன்

அமெரிக்காவில் காற்று மாசு அதிகமுள்ள முதல் ஐந்து நகரங்களும் கலிபோர்னியா மாகாணத்திலேயே உள்ளன.

தாய்லாந்து நாட்டுக்குச் செல்பவர்கள் மறக்காமல் வாங்கி வர வேண்டிய இரு கைவினைப் பொருள்கள் 'சிரிக்கும் குபேரன்', 'பெங்சூயி டிராகன்' ஆகியவையாகும். மீன் சார்ந்த உணவுப் பொருள்கள் இங்கு பிரபலம்.

உலகிலேயே சிரியா தலைநகரமான டமாஸ்கஸ் மிகப் பழமையான நகரமாகும்.

பெல்ஜியத்தில் இன்றும் மரத்தாலான காலணிகளை மக்கள் அணிகின்றனர்.

துரு என்பதன் வேதிப் பெயர்- இரும்பு ஆக்ஸைடு.

கடல்நீரைக் குடிநீராக மாற்ற மேற்கொள்ளப்படும் செயல்முறை- காய்ச்சி வடித்தல்.

ராக்கெட்டில் எரிபொருளாகப் பயன்படுவது- நீர்ம ஹைட்ரஜன்.

நங்கூரம், குதிரை லாடம் தயாரிக்கப் பயன்படும் இரும்பின் வகை- தேனிரும்பு.

நியூசிலாந்து நாட்டில் காக்கைகள் கிடையாது.

நீரை உறிஞ்சிக் குடிக்கும் பறவை- புறா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.