இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் 1950-இல் அரசியல் நிர்ணயச் சபையில் தேசியக் கீதமாகத் தேர்ந்தெடுக்க மூன்று கவிதைகள் ஆராயப்பட்டன.
முதலாவதாக சர் முகம்மது இக்பால் எழுதிய, 'சாரே ஜஹான்சே அச்சா..' இரண்டாவதாக ரவீந்திரநாத் தாகூர் எழுதிய 'ஜன கண மன..', மூன்றாவதாக பக்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய 'வந்தே மாதரம்..' ஆகியவைதான். இவற்றில் 'ஜன கண மன...' ஏகமனதாக அங்கீகாரம் பெற்றது.
தாகூரில் இந்தக் கவிதை 1950 ஜனவரி 24-இல் தேசியக் கீதமாக ஏற்கப்பட்டது. இந்தப் பாடலைப் பாட வேண்டிய நேரம் 52 விநாடிகள். இந்தப் பாடல் முதலில் 1911-இல் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பட்டது.
விமான டயர்களில் காற்று அடைக்கப்படுவதில்லை. ஆக்ஸிஜன் இல்லாத நைட்ரஜனே அடைக்கப்படுகிறது. ஏனெனில், விமான டயர், தரையில் உராயும்போது ஏற்படக் கூடிய தீ விபத்தை நைட்ரஜன் குறைத்துவிடும் தன்மையைக் கொண்டது.
பூமிக்கு அடியில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் வழக்கம் உலகமெங்கும் இருக்கிறது. உலகிலேயே மிக ஆழமான மெட்ரோ ரயில் நிலையம் என்ற சிறப்பை சீனாவில் உள்ள ஹாங்யான் குன் மெட்ரோ ரயில் நிலையம் பெற்றுள்ளது. இது 116 மீட்டர் (அதாவது 381) ஆழத்தில் அமைந்துள்ளது.
இதற்கு முன்பு உக்ரைனில் உள்ள அர்செனால்னா பகுதியில் உள்ள கிய்வ் மெட்ரோ நிலையமே (105 மீட்டர்- 344 அடி) மிக ஆழமான மெட்ரோ ரயில் நிலையமாக இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒசூரில் உலகத் தரம் வாய்ந்த விமான நிலையம்: அண்ணாமலை வாக்குறுதி

இது தெரியுமா? தலைகீழாக மரம் வளருமா?

மெட்ரோ ரயில் திட்டம் தொடங்க போா்க்கால நடவடிக்கை தேவை

தே.ஜ. கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் அமல்! - ஃபட்னவீஸ் பேச்சு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


