தேர்தலில் வாக்களிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை 22 நாடுகளில் உள்ளது. அதில் ஆஸ்திரேலியாவும் ஒன்று. இங்கு சரியான காரணமின்றி வாக்கு அளிக்காமல் இருந்தால், 20 டாலர் அபராதம் விதிக்கப்படுகிறது. அதைக் கட்டத் தவறினால், அபராதம் அதிகரிக்கும்.
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் செவ்வாய்க்கிழமையும், கனடாவில் திங்கள்கிழமையும், இங்கிலாந்தில் வியாழக்கிழமையும் தேர்தல்கள் நடைபெறும்.
ஆப்பிரிக்காவையும் ஆசியாவையும் இணைக்கும் முக்கோண வடிவிலான பகுதியே சினாய். இது எகிப்தின் வடகிழக்கு மூலையாகும். சினாயின் வடக்கே மத்திய தரைக்கல் அமைந்துள்ளது. மேற்கே பாதிக்கும் மேற்பட்ட பகுதி சூயஸ் வளைகுடா. இதன் தொடர்ச்சியாக, தென்மேற்கிலும் தெற்கிலும் செங்கடல் அமைந்துள்ளது.
போர்ச்சுக்கல்லில் ஒக்ஃபைன் வனப் பகுதிகள் மிக அதிகம். இங்கு விளையும் பட்டை, கார்க் ஆகியன அதிக அளவில் ஏற்றுமதியாகிறது. உலக கார்க் ஏற்றுமதியில் பாதிக்கு மேல் போர்ச்சுக்கல் பங்களிப்பாகும்.
சுற்றுலாவும் தபால் தலைகளுமே லிச்டென்ஸ்டெயின் நாட்டின் முக்கிய வருவாய் ஆதாரங்களாகும்.
முன்னாள் டச்சு காலனியான சூரிநாமில் இருந்து குடியேறியவர்களே நெதர்லாந்து இந்தியர்கள். 1873-91 காலகட்டத்தில் உத்தரப் பிரதேசம், மேற்கு பீகார் பகுதிகளில் இருந்து கரும்புத் தோட்டங்களுக்கு தொழிலாளர்களாக இந்தியர்கள் கொண்டு செல்லப்பட்டனர். "இந்துஸ்தானி' என்று அழைக்கப்பட்ட இவர்கள், 1960-களில் நெதர்லாந்தில் குடியேறினார்.
கடல் மட்டத்தில் இருந்து முக்கிய நகரங்களின் உயரம் பின்வருமாறு: சென்னை- 6.7 மீ., கொல்கத்தா- 9.14 மீ., மும்பை- 14 மீ., விசாகப்பட்டினம்- 45 மீ., மதுரை- 134 மீ., கோயம்புத்தூர்- 427 மீ., பெங்களூரு- 920 மீ., உதகை- 2,240 மீ., எவரெஸ்ட் மலைச் சிகரம்- 8,849 மீ.
ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 266 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட லடாக், இந்தியாவிலேயே மிகப் பெரிய மக்களவைத் தொகுதியாகும்.
மும்பைக்கும் தாணேவுக்கும் இடையே உள்ள 21 கி.மீ. நீளத்துக்கு சுரங்கப் பாதை அமைக்கப்பட இருக்கிறது. இதில், 7 கி.மீ. நீள பாதை கடல் பகுதியில் அமைகிறது. நாட்டில் கடலுக்கு அடியில் அமைய இருக்கும் முதல் சுரங்கப் பாதை இதுவேயாகும்.
மனிதர்கள் உயிரிழந்தவுடன் அவர்களது உறுப்புகள் உயிரோடு இருக்கும் கால நேரம்: கண்- 31 நிமிடங்கள், மூளை- 10 நிமிடங்கள், கால் - 4 மணி, இதயம்- 4 - 6 மணி, நுரையீரல்- 4-6 மணி, கல்லீரல்- 8-12 மணி, கணையம்- 24 முதல் 36 மணி, சிறுநீரகம்- 24 மணி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பராமரிப்புப் பணி: பழனியில் ஏப். 16-இல் ரோப் காா் சேவை நிறுத்தம்

வெள்ளமலை சுரங்கப் பாதை ரூ.5.30 கோடி மதிப்பில் புனரமைப்புப் பணி

ரயில்வே சுரங்கப் பாதை அமைக்கக் கோரி போராட்டம்

கல்வியில் சிறப்பு தரும் காமாட்சி அம்மன்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


