கேள்வி: பெரிய தொழிற்சாலைகளின் புகை போக்கிகள் மிகவும் உயரமாக அமைக்கப்பட்டிருப்பதன் காரணம் என்ன?
பதில்: நிறைய தொழிற்சாலைகளுக்கு ஏராளமான வெப்பம் தேவைப்படுகின்றது. இதற்காக அவற்றில் பலவித பொருள்களை எரித்து வெப்பத்தை உண்டாக்குகிறார்கள். சிலவற்றில் மரக்கட்டைகள், சிலவற்றில் நிலக்கரி, சிலவற்றில் பெட்ரோலியம் போன்றவை.
இவை அனைத்துமே எரிக்கப்படும்போது மிக அதிக அளவில் கரியமில வாயுவை (கார்பன் டை ஆக்லைட்) வெளியிடுபவை. உங்களுக்கு நன்றாகச் தெரியும். கரியமில வாயு மிகுந்த விஷத்தன்மை கொண்டது என்றது. அதை நாம் அதிகமாக சுவாசித்தால் உடல்நலக் கேடு உண்டாகும். உயரம் குறைவான புகை போக்கிகள் இருந்தால் நாம் சுவாசிக்கும் காற்றில் அவற்றிலிருந்து வரும் கரியமில வாயு எளிதாகக் கலந்து விடும். இந்தக் காற்றை நாம் சுவாசித்தால் நமக்குத்தான் கேடு.
மேலும் கரித்துகள்கள் வேறு இந்தப் புகை போக்கிகள் வழியே வெளி வரும். இந்தத்துகள்கள் நமக்கு மூச்சுத் திணறல் ஆகிய உபாதைகளைத் தரக்கூடியவை. புகை போக்கிகள் மிக உயரமாக இருந்தால் வானில் உயரத்தில் இந்தக் கரியமில வாயுவும் கரித்துகள்களும் விண்வெளியில் கலந்து விடும். அப்போது நமக்கு பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. அதனால்தான் புகைபோக்கிகள் மிக உயரமாக அமைக்கப்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திலக் அதிரடி, அஸ்வினி அசத்தல்; மும்பை அபாரம்!
இன்டர் காசியை வீழ்த்தியது பஞ்சாப் எஃப்சி!

நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!

தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


