அங்கிள் ஆன்டெனா
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர், நமது முன்னோர், உலகின் பல்வேறு பாகங்களிலும்


உலகில் ஏன் இத்தனை மொழிகள்?
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர், நமது முன்னோர், உலகின் பல்வேறு பாகங்களிலும் தனித்தனி சிறு குழுக்களாக வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்குத் தங்களைப் போலவே வேறு நாடுகளிலும் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்பதுகூடத் தெரியாது.
இப்படிச் சிறு குழுக்களாக வாழ்ந்து வந்தவர்கள் தங்களுடன் உள்ளவர்களிடம் தங்கள் எண்ணங்களைப் பரிமாறிக் கொள்வதற்குப் பலவிதமான ஒலிகளைத்தான் பயன்படுத்தி வந்தார்கள். இந்த ஒலிகள் நாளடைவில் சரியாக வளர்ச்சியடையாத மொழிகளாக மாறின. ஏன், சித்திர எழுத்துகளைக்கூடப் பயன்படுத்தி ஒருவருக்கு ஒருவர் தங்கள் எண்ணங்களைப் பரிமாறிக் கொண்டனர். இப்படிப்பட்ட சிறிய குழுக்களுக்குள் சில ஒலிகள் மொழிகளாக நாளடைவில் மாறின.
உலகில் மற்ற பகுதிகளில் வசித்தவர்களும் தங்களுக்கென்று பிரத்யேகமான மொழிகளையும் ஒலிக்குறிப்புகளையும் உருவாக்கிக் கொண்டனர். இதனால், பல்வேறு பகுதிகளில் பல்வேறு விதமான மொழிகள் தோன்ற ஆரம்பித்தன. ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாத பல குழுக்களுக்கிடையே பல்வேறு விதமான மொழிகள் தோன்ற ஆரம்பித்தன. நாளடைவில் பரிணாம வளர்ச்சியில் இப்படிப் பல்வேறு மொழிகள் தோன்றி வளர்ச்சி பெற்றன.
அக்காலத்தில் நமது தமிழர்கள் பேசிய தமிழை நாம் இப்போது கேட்க நேர்ந்தால், அதுகூட நமக்குப் புரியாததாகத்தான் இருக்கும். இப்படி உலகில் பல்வேறு மொழிகள் தோன்றுவதற்கு வளர்ச்சிதான் காரணம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...