லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

அங்கிள் ஆன்டெனா

நமக்குப் சிறுவயதில் நடந்தவை ஞாபகத்திற்கு வருவது போல, விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் ஞாபகம் வருவது உண்டா? 

News image
Updated On :28 டிசம்பர் 2018, 6:30 pm


கேள்வி: நமக்குப் சிறுவயதில் நடந்தவை ஞாபகத்திற்கு வருவது போல, விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் ஞாபகம் வருவது உண்டா? 

பதில்: இயற்கை மனிதர்களுக்கு மட்டும் மேம்பட்ட மூளையைக் கொடுத்துள்ளது. இருந்த போதிலும் மனிதக் குரங்கு, டால்பின், ஆக்டோபஸ் போன்றவற்றின் மூளை வளர்ச்சி அபரிமிதமானது.

முதல் வகுப்பில் நம்முடன் படித்த நண்பனின் பெயர், ஆசிரியரிடம் பாராட்டுப் பெற்றது போன்றவை நமக்கு ஆயுசுக்கும் மறக்காது. நம்மால் எத்தனை ஆண்டுகளுக்குப்கத பிறகும் அவற்றை நினைவுக்குக் கொண்டு வர இயலும்.

விலங்குகளுக்கும் ஞாபகசக்தி உண்டு. ஆனால் நம் அளவுக்குக் கிடையாது. எதிரியிடம் இருந்து தப்பிப் பிழைத்த அந்த நிமிடம், இரை மலிந்து கிடக்கும் இடம் ஆகியவற்றை விலங்குகள் மறப்பதில்லை.

ஒரே விஷயம் திரும்பத் திரும்ப நடந்தால் மட்டுமே  ஞாபகத்தில் இருக்கும். இந்த குறைந்த அளவு ஞாபகசக்தியைக் கொண்டுதான் விலங்குகள் பிழைத்து வருகின்றன. 

டால்ஃபினுக்கு மட்டும் ஒரு முறை பார்த்தவற்றை மீண்டும் ஞாபகத்துக்குக் கொண்டு வரும் சக்தி இருக்கிறதாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.