கேள்வி: நமக்கு துக்கம் வந்தால் ஏன் கண்ணீர் வருகிறது?
பதில்: துக்கம் வந்தால் மட்டுமல்ல வெங்காயம் வெட்டினால்கூட கண்ணீர் வரும். அடக்க முடியாமல் சிரித்தாலும் கண்ணீர் வரும்.. பெரிய சாதனைகளைப் பார்த்து வியக்கும்போதும் கண்ணீர் வரும்...
மனிதன் அளவுக்கு அதிகமாக உணர்சிசவசப்படும்போது, உள்ளே இருக்கும் குழாய்கள் திறந்து கொள்கின்றன. மளமளவென்று நீரை வெளியேற்றுகின்றன. இந்த நீர்தான் கண்ணீராக வெளிவருகிறது. உள்ளே ஒரு குழாய் ரிப்பேர்காரர் இருக்கிறார் போலும்.
இந்தக் குழாய் ரிப்பேர்காரர் நமது கண்களுக்கு மிக அருகாமையில் அமர்ந்து இருக்கிறார். அதாவது கண் இமைக்கும் கண் பாப்பாவுக்கும் இடையில் இருக்கிறார். இவர்தான் கண்ணீர் சப்ளை செய்பவர். கண்ணிரைத் தயாரிக்கவும் செய்வார், வெளியேற்றவும் செய்வார்.
இவர் ஒருவிதமான "கிளாண்ட்'. லாக்ரிமால் கிளாண்ட் என்று இவருக்குப் பெயர். உங்களுக்கு உணர்வு மேலிடும்போது நமது கண் இமை துடித்து இவர் மீது படுகிறது. இவரும் ரொம்ப உணர்ச்சிவசப்படக்கூடியவர். ஆகவே, உடனே நீரை உண்டாக்குவார். கண் இமைகள் மீண்டும் மீண்டும் படபடக்க மளமளவென்று நீர் உருவாகி, கண்ணீராக வெளியேற்றப்படுகிறது.
இந்தக் கண்ணீர் வெளிவருவது நல்லது என்றுதான் எல்லா ஆராய்ச்சியாளர்களும் சொல்கிறார்கள். துக்கத்தை அடக்கி அடக்கி மனதைப் புண்ணாக்கிக் கொள்வதற்குப் பதிலாகக் கண்ணீராக வெளியேற்றி விடுவதுதான் நல்லது. ஆகவே தைரியமாகக் கண்ணீர் விடுங்கள், ஆனால் முதலைக் கண்ணீர் மட்டும் விடாதீர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்

‘சிஎம் சார், 5 வருசத்துல என்ன பண்ணிருக்கீங்க?’ என கேட்டால்... ஸ்டாலின் விளக்கம்!
தவெக தலைவர் விஜய் இன்று எங்கு பிரசாரம் செய்கிறார்?

தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைப்பவர்களுக்கு நான் டேஞ்சர்! - முதல்வர் ஸ்டாலின்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


