கேள்வி:
மீன்களில் எலக்ட்ரிக் ஈல் என்னும் மீன் மட்டும் மின்சாரம் உற்பத்தி செய்கிறது என்கிறார்கள். இது உண்மையா? எதற்கு இந்த மின்சாரம்?
பதில்:
உண்மைதான்! ஆனால், நமக்குத் தெரிந்தது போல எலக்ட்ரிக் ஈல் மட்டுமல்ல, ஆப்பிரிக்காவின் மின்கெளிறு, இந்தியக் கடலிலில் வாழும் மின் திருக்கை, ஜிம்னார்க்ஸ் கோப்பஸ் போன்ற பல மீன்கள், மின்சாரத்தை உடலில் கொண்டிருக்கின்றன... பாய்ச்சுகின்றன.
பத்து அடி நீளம் இருக்கும் எலக்ட்ரிக் ஈல் மீனின் உடம்பில் முக்கால் பகுதி வால்தான்! இந்த வாலிலில் உள்ள பக்கவாட்டுத் தசைகள்தான் மின் உற்பத்தி நிலையங்கள்.
இவற்றைப் பயன்படுத்தி, வினாடிக்கு 600 வோல்ட் மின்சாரத்தை இந்த மீன்கள் பாய்ச்சும். மீனின் மின்தாக்குதலிலில் சிக்கினால், அதிவலிமையான மனிதன்கூட ஸ்தம்பித்துத்தான் போக நேரிடும்.
நம்மூரில் நெய்வேலியிலும் இன்ன பிற மின் நிலையங்களிலும் இந்த மீனை வளர்த்தால் மின்சாரப் பற்றாக்குறையை ஈடு செய்யலாம் என்று தோன்றுகிறதல்லவா? இந்த மீன்கள் அதற்காகவெல்லாம் மின்சாரத்தை உற்பத்தி செய்யவில்லை.
தன்னைத் தாக்க வரும் எதிரிகளிடமிருந்து தப்பிக்கதான் இந்த ஷாக் டிரீட்மெண்ட். இது மட்டும் இல்லையென்றால் மனிதன் இதையும் பிடித்து கருவாடு போட்டுவிடுவான். அல்லது பெரிய சைஸ் மீன்கள் கவ்விக்கொண்டு போய்விடும் என்ற எச்சரிக்கைதான் காரணம்.
அடுத்த வாரக் கேள்வி
விலங்குகளையும் கருணைக் கொலை
செய்வதுண்டா?
பி.கு.: இந்தப் பகுதிக்கு வாசகமணிகளும் கேள்விகளை அனுப்பலாம். இதுவரை இந்தப் பகுதியில் வெளிவராத கேள்விகளாக இருந்தால், நிச்சயம் நல்ல பதில் கிடைக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்

‘சிஎம் சார், 5 வருசத்துல என்ன பண்ணிருக்கீங்க?’ என கேட்டால்... ஸ்டாலின் விளக்கம்!
தவெக தலைவர் விஜய் இன்று எங்கு பிரசாரம் செய்கிறார்?

தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைப்பவர்களுக்கு நான் டேஞ்சர்! - முதல்வர் ஸ்டாலின்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


