/

விடுகதைகள்

மரம் ஏறினால் வழுக்குது, காய் தின்றால் துவர்க்குது, பழம் தின்றால் இனிக்குது..?

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:42 pm

ரொசிட்டா

1.  மளிகைக் கடையில் இருப்பாள் இந்த ராணி...?
2.  மரம் ஏறினால் வழுக்குது, காய் தின்றால் துவர்க்குது, பழம் தின்றால் இனிக்குது..?
3.  செய்தி வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே..?
4.  காலையில் வந்த விருந்தாளி, மாலையில் போய் விடுவார்..?
5.  கருப்பர்கள் காலம் முடிந்தால், வெள்ளையர்கள் ஆதிக்கம்... இது என்ன?
6.  ஒன்றைப் பிரிந்து மற்றொன்று வாழாது... இது என்ன?
7.  பூ கொட்ட கொட்ட பொறுக்க முடியவில்லை...
8.  எட்டாத கொம்பில் மிட்டாய் பொட்டலம்... என்ன இது?
9.  அளைவான், நெளிவான் ஆனால் ஒடிய மாட்டான்... யார் இவன்?
விடைகள்:
1. சாம்பிராணி
2. வாழை மரம், வாழைக்காய், வாழைப்பழம்
3. தொலைபேசி
4. சூரியன்
5. நரைமுடி
6. செருப்பு
7. மத்தாப்பூ
8. தேன்கூடு
9.  தலைமுடி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.