அரங்கம்: காகிதக் கிளி!
தருண்: தாத்தா! வானத்துல பாருங்க! எவ்ளோ பெரிய கிளிக்கூட்டம் பறந்து போகுது!


காட்சி-1
இடம்-சிறுவர்கள் தருண், யுவன், தாத்தா.
தருண்: தாத்தா! வானத்துல பாருங்க! எவ்ளோ பெரிய கிளிக்கூட்டம் பறந்து போகுது!
யுவன்: கீ...கீ...ன்னு கத்திகிட்டே போகுதில்லே...
தாத்தா: கீ...கீ...ன்னு கத்தற கிளிங்களை நம்ம மாதிரி பேசவும் வைக்கலாம்! தெரியுமோ?
தருண்: என்னது கிளி நம்ம மாதிரி பேசுமா?
தாத்தா: ஓ!....பேசும் கிளிகள் உண்டு! நானே வளர்த்திருக்கிறேன்!
யுவன்: தாத்தா! அந்தக் கிளி இப்போ எங்கே?
தாத்தா: உங்க பாட்டி அதைக் கூண்டுல இருந்து பறக்க விட்டுட்டா!
தருண்: ஏன் தாத்தா?
தாத்தா: அது ஒரு வேடிக்கையான கதை! நான் வளர்த்த கிளிக்கு நல்லா பேசறதுக்கு பயிற்சி கொடுத்தேன்....யார் வந்தாலும் வாங்க! வணக்கம்! என்ன சாப்பிடறீங்க?...என்று கேட்கும். விருந்தாளிகள் வீட்டை விட்டுப் போகும்போது "வணக்கம்...மறுபடி
வாங்க!' ன்னு கத்தும்!
தருண்: ஹையா! வேடிக்கையா இருக்கே?
யுவன்: அப்புறம் என்ன ஆச்சு?
தாத்தா: ஒருநாள் நாங்க மாடியிலே தூங்கிக்கிட்டு இருந்தோம்....கீழ் வீட்டுக்கு திருடன் வந்து பீரோவை உடைச்சு நகை எல்லாம் எடுத்துக்கிட்டு போயிட்டான்! பக்கத்து வீட்ல என்ன சொன்னாங்க தெரியுமா?.....""ராத்திரி உங்க வீட்டு கிளி, "வாங்க! வாங்க வணக்கம்னு கத்திக்கிட்டே இருந்தது!....யாரோ விருந்தாளி வந்திருக்காங்க போலன்னு நினைச்சுகிட்டோம்!...,கொஞ்ச நேரம் கழிச்சு "வணக்கம் மறுபடி வாங்க'ன்னு
கத்திச்சு!''ன்னாங்க...
தருண், யுவன்: அடக்கடவுளே! திருடன் வந்துட்டானா? (விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்)
தாத்தா: பாட்டிக்கு கோபம் வந்துட்டுது! கிளிமேலே கோபம் வேணாம்...னு சொல்லிப் பார்த்தேன்....கேட்கலை! ""திருடனுக்கு வரவேற்பா கொடுக்கறே''ன்னு சொல்லிக்கிட்டே கூண்டைத் திறந்து கிளியைத் துரத்தி விட்டுட்டா!
தருண்: தாத்தா நாம இப்போ கிளி வளர்க்கலாம் தாத்தா! "திருடன்...திருடன்' கத்தறதுக்குச் சொல்லித்தரலாம்!
தாத்தா: கிளிக்கு விவரம் பத்தாதுடா! விருந்தாளியைப் பாத்து, "திருடன்...,திருடன்'னு கத்தினா வம்பாப் போயிடுமே!
தருண்: (சிரிக்கிறான்) தாத்தா ப்ளீஸ் தாத்தா! கிளி வளர்க்கலாம் தாத்தா!
தாத்தா: பார்க்கலாம்!
காட்சி-2
இடம்-தெரு
மாந்தர்-கிளி வியாபாரி, தருண், யுவன்.
(தெரு வழியே ஒரு வியாபாரி கத்திக்கொண்டு போகிறான்)
கிளி வியாபாரி: கிளி வாங்கலையோ கிளி! காகிதக் கிளி வாங்கலையோ! காகிதக் கிளி!
தருண்: டேய்! யுவன்! காகிதக் கிளிடா! அப்பிடியே நிஜக்கிளி மாதிரி இருக்குடா!
கிளி வியாபாரி: (கண்ணைச் சிமிட்டியபடி) தம்பிகளா! அதோ அந்தக் காகிதக் கிளி மட்டும் நூறு ரூபா! ஏன் தெரியுமா? அது பறக்கும்! பேசும்! ஒரு சாமியார் அதுக்கு உயிர் கொடுத்திருக்காரு!
தருண்: என்னது அந்தக் கிளி பேசுமா?
வியாபாரி: பேசிப் பாரேன்!
தருண்: கிளியே! செüக்கியமா?
கிளி: கீக்கீ! செüக்கியமா?
தருண்:(துள்ளிக்குதிக்கிறான்) டேய் யுவன்! பர்த்டேக்கு தாத்தா குடுத்த நூறுரூபா இருக்குடா! அந்தப் பணத்தைக் கொடுத்து இந்தக் கிளியை எப்படியாவது வாங்கிடலாம்டா! அப்புறம் எதையாவது சொல்லி சமாளிச்சுக்கலாம்!
(காகிதக் கிளியை வாங்கிக்கொண்டு இருவரும் திரும்புகிறார்கள்)
.....கிளி டி.வி. மேல் பறந்து போய் உட்காருகிறது. யுவன் தோள் மீது நிற்கிறது. தத்தித் தத்தித் தருண் மீது தாவுகிறது.
காட்சி-3
இடம்-வீடு
மாந்தர்-தாத்தா, தருண், யுவன், கிளி.
---கிளியின் சத்தம் குழந்தைகளின் கும்மாளம்....தாத்தா உள்ளே நுழைகிறார்.----
தாத்தா: என்ன...கிளி வாங்கியாச்சா?
தருண்: வாங்கியாச்சு தாத்தா! ஆனால் இது காகிதக் கிளி! பேசுது..!
தாத்தா: என்னது? காகிதக் கிளி பேசுமா?
தருண்: ஆமாம் தாத்தா! அதிசயமான கிளி இது! நிஜக்கிளி மாதிரியே நடக்கும்! பறக்கும்! பேசக்கூட செய்யும்!
தாத்தா: நீ பேசுவியா?
கிளி: (தாத்தாவைப் பார்த்து) நீ பேசுவியா?
---தாத்தா சிரிக்கிறார்---
தாத்தா: (பேரன்களிடம்) ரொம்ப அழகாத்தான் இருக்கு....நிஜக்கிளி மாதிரியே....நல்லாப் பண்ணியிருக்கான்! அவனைப் பாராட்டத்தான் வேணும்! என்ன இருந்தாலும் காகிதக்கிளி, நிஜக்கிளி ஆகமுடியாது குழந்தைகளே!
காட்சி-4
இடம்-வீட்டுக்கு வெளியே மரத்தடி.
மாந்தர்- தாத்தா, தருண், யுவன்.
(கீ...கீ....என்று கத்தியபடி காகிதக்கிளி வீட்டுக்கு வெளியே இருந்த வேப்பமரக் கிளை மீது பறந்து போய் உட்காருகிறது. திடீரென்று மழை வந்து விடுகிறது.)
தருண், யுவன்: கம் ஆன்! கிளி போதும்! போதும்! வந்துடு! மழை வருது!
---மழை சோவென்று கொட்டுகிறது. கிளி மழையில் பறந்து வருகிறது. பொத்தென்று கீழே விழுகிறது------
தருண்: என்ன ஆச்சு? என்ன ஆச்சு?
----கிளி பேச்சு மூச்சில்லாமல் கிடக்கிறது----
தருண்: கிளி செத்துப் போச்சுடா!
---தாத்தா வருகிறார்----
தருண்: தாத்தா, கிளி செத்துப் போச்சு! மழையில் நனைஞ்சு செத்துப் போச்சு!
தாத்தா: நான் சொன்னேனா இல்லையா? காகிதம் கிளியாக முடியாது! மழையில் நனைஞ்சதும் சாயம் வெளுத்துப் போச்சு!
யுவன்: அதோ பார்றா! மழைநீரில் பச்சை, சிவப்பு, சாயம் கரைந்து வெறும் காகிதமாக கிடக்கிறது கிளி!
காட்சி-5
இடம்- மரத்தடி.
மாந்தர்-தாத்தா, தருண்,யுவன்.
----மழை நின்று விட்டது...இரண்டு நாட்களும் ஆகிவிட்டது...சூரிய ஒளியில் நன்றாகக் காய்ந்த கிளியை விட மனமின்றி தருண் அதை எடுத்து பச்சை வண்ணம் தீட்டுகிறான்..., கிளிக்கு மறுபடி உயிர் வருகிறது......தருணும், யுவனும் அதை வைத்துக் கொண்டு விளையாடுகிறார்கள்----
தாத்தா: தருண்! யுவன்! என்ன கிளிக்கு மறுபடி உயிர் வந்துடுச்சி போலிருக்கே!
தருண்: ஆமாம் தாத்தா!
தாத்தா: இருந்தாலும் அது நிஜக்கிளி இல்லே! நனைஞ்சா திரும்ப செத்துப் போகும்!
தருண்: நிஜக்கிளி கூடத்தான் ஒருநாள் செத்துப் போகும்...அதுக்கென்ன...! இருக்கற
வரைக்கும் ஜாலியா பறந்து திரிஞ்சு விளையாடிக்கிட்டு இருக்க வேண்டியதுதான்!
---தாத்தா ஆச்சரியமும் மகிழ்ச்சியும் கலந்து சிரிக்கிறார்-----
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...