லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

முத்துக் கதை: வால் இழந்த நரி

காட்டில் விலங்குகளைப் பிடிக்க வைத்திருந்த பொறி ஒன்றில் ஒரு நரியின் வால் மாட்டிக்கொண்டது.

News image
Updated On :20 ஜூன் 2016, 2:42 am

காட்டில் விலங்குகளைப் பிடிக்க வைத்திருந்த பொறி ஒன்றில் ஒரு நரியின் வால் மாட்டிக்கொண்டது. பொறியில் இருந்து விடுபடக் கடுமையாக முயற்சித்தது நரி. கடைசியில் ஒரு வழியாக விடுதலை பெற்றுவிட்டது. ஆனால் பரிதாபம், பொறியில் சிக்கிய அதன் வால் துண்டாகிவிட்டது.

 "வால் இல்லாமல் அசிங்கமாகிப் போய்விட்டேனே, எல்லா நரிகளும் என்னைப் பார்த்துக் கிண்டல் செய்யுமே?' என்று தனது பின்புறத்தைத் திரும்பித் திரும்பிப் பார்த்துப் புலம்பியது நரி.

 பிற நரிகளின் கிண்டலில் இருந்து தப்பிப்பது எப்படி என்று தீவிரமாக யோசித்த அந்த நரி, கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தது.

 உடனே அது நரிகளை எல்லாம் அழைத்தது. அவற்றின் முன் கம்பீரமாக அமர்ந்தபடி பேசத் தொடங்கியது.

 ""சகோதரர்களே... நமக்குத் தேவையில்லாமல் நீளமாக வால் இருக்கிறதே என என்றாவது நீங்கள் யோசித்தது உண்டா? நமக்குத் தேவையில்லாத சுமையாக இருக்கும் வாலை நாம் வெட்டி எறிந்து விடுவோம்!''

 அப்போது மற்ற நரிகள், அந்த நரிக்கு வால் இல்லாததைக் கவனித்தன.

 அவை சிரிப்போடு கூறின: ""நரிகளுக்கு வால்தான் அழகு என்று நீ முன்பு பேசித் திரிந்ததை மறந்துவிட்டாயா? தற்போது நீ வாலை இழந்துவிட்டதால் இப்படிப் பேசுகிறாய். எல்லோரும் வாலை இழந்துவிட்டால் நம்மை யாரும் கிண்டல் செய்ய மாட்டார்கள் என்று எண்ணுகிறாயா?''

நீதி: மலிவான உத்திகள் எப்போதும் பயன் தராது.

("சிறுவர் கதை அமுதம்' என்னும் நூலிலிருந்து)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.