லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஆடுகளம்

Updated On :27 பிப்ரவரி 2016, 10:59 am
Story image

இதிலுள்ள  6 துண்டுப் படங்களையும் சரியாகக் கத்திரித்து, ஒழுங்காக   ஒட்டினால் ஓர் அழகிய படம் வரும்.  

Story image

அந்தப் படத்தைப்  பார்த்து  நீங்கள் வரைந்தும் பார்க்கலாம்   அதற்கு  வண்ணம் தீட்டியும் மகிழலாம்!

சொல் ஜாலம்...

Story image

இங்கே கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் வரும் எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் அர்த்தமுள்ள புதிய சொல்

(இரண்டு பக்கமும் அடி வாங்கும்)  ஒன்று கிடைக்கும். எளிதில் கண்டு பிடித்து விடுவீர்கள். முயற்சியுங்கள்...

1. மந்திரவாதிகள் பயன்படுத்தும் சொல்

2. பிஞ்சுக் கைவண்ணம்

3. தமிழின் சிறப்புப் பெயர்

4. இதைச் சாப்பிட உங்களுக்கு மிகவும் பிடிக்கும்.

5. நடனத்தை இப்படியும் அழைப்பார்கள்

விடை: கட்டங்களில் வரும் சொற்கள்

1. மந்திரம், 

2. சித்திரம், 

3. செந்தமிழ், 

4. அப்பளம், 

5. நாட்டியம்

வட்டங்களில் சிக்கிய எழுத்துக்கள் மூலம் கிடைக்கும் சொல்: மத்தளம்

விண்வெளி வீரருக்கு, ராக்கெட்டுக்குப் போக வழி காட்டுங்கள்!

Story image

கண்டுபிடி  கண்ணே!

Story image

இரண்டு படங்களுக்கும் உள்ள  6 வித்தியாசங்களைக் கண்டுபிடியுங்கள்! 

Story image

1 முதல் 79 வரை உள்ள  புள்ளிகளை இணைத்து கரடியாரைக் கண்டுகொள்ளுங்கள்...

Story image

விடுகதைகள்

Story image

1.   மேல் வீட்டில் மத்தளமாம்; கீழ் வீட்டில் நாட்டியமாம்...

2.    காட்டிலே பச்சை; கடையிலே கருப்பு; வீட்டிலே சிவப்பு...

3.   சின்னப் பையனைப் பிடித்தேன்; மஞ்சள் சட்டையைக் கிழித்தேன்; வாய்க்குள்ளே போட்டு அடைத்தேன்; வயிற்றுக்குள்ளே சேர்த்தேன்...

4.   ஆடச் சொல்லி சட்டை போடுவார்; ஆடும் முன்பே கழற்றி விடுவார்...

5.   ஒரே குளத்தில் ஒரே மீன். வெளியே எட்டிப் பார்த்தாலும் வேறு குளம் போகாது...

6.   வயிறு புடைக்கத் தின்றால்தான் நிமிர்ந்து நிற்பான் குண்டப்பன்...

7.   இரவு வந்தால் தோட்டத்தில் எத்தனையோ பூ பூக்கும். பொழுது விடிந்ததுமே பூவெல்லாம்  மறைந்துவிடும்....

8.   அப்பா வீட்டுக் குதிரை, அற்புதமான குதிரை, காதைப் பிடித்தால் வாயால் கடிக்கும்...

9.   வேகமாகப் போகிற அம்மணிக்கு விழுந்த கைக்குட்டையை எடுக்க நேரமில்லை.

விடைகள்:

1. இடி, மழை,  

2. மரம், கரி, நெருப்பு,  3. வாழைப்பழம், 

4. பம்பரம், 

5. நாக்கு,

6.   சாக்கு (கோணிப்பை), 

7. நட்சத்திரங்கள், 

8. கத்தரிக்கோல்,

9. பறவை இறகு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.