பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

பொன்மொழிகள்

ஒருவனுடைய ஆசைக்கும் திறமைக்கும் இடைவெளி அதிகம் இருந்தால் அவன்

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:27 pm

முக்கிமலை நஞ்சன்

*  ஒருவனுடைய ஆசைக்கும் திறமைக்கும்

இடைவெளி அதிகம் இருந்தால் அவன்

வாழத்தெரியாதவன். இரண்டும் ஒன்றியிருந்தால் அவன் வாழ்கிற மனிதன்.

-கதே

*  உனக்காகப் பொய் சொல்லுபவன் உனக்கு

எதிராகவும் சொல்வான்.

-இங்கர்சால்

*  உலக சரித்திரத்தில் காணப்படும் சாதனைகள் அனைத்தும் உற்சாகத்தின் வெற்றிச்

சின்னங்களே!

-எமர்ஸன்

*  உண்மை என்பது புனிதமான சாதனை

-டாக்டர் ராதாகிருஷ்ணன்

*  இலக்கியம் என்பது வாழ்க்கையைப் பார்த்து எழுதப்படும் அதன் நகல் அல்ல.

வாழ்க்கையையே தன் போக்கிற்கேற்ப மாற்றி அமைத்து மறுகோலம் செய்யும் அச்சு

-ஆஸ்கார் ஒயில்ட்

*  அவரவர் வீழ்ச்சிக்கு அவர்களேதான்

காரணமாக இருக்க முடியும்.

-நெப்போலியன்

*  வெற்றி என்பது குறிக்கோள் அன்று. அது ஒரு பயணமே. பயணம் தொடர்ந்துகொண்டே இருக்க வேண்டும்.

-ஆர்ஷேவிட்

*  விடாமுயற்சி உடையவன் விரும்பிய

அனைத்தையும் பெற்று விடுகிறான்.

-ரூஸ்வெல்ட்

*  வார்த்தையில் மட்டும் பணிவு இருந்தால் போதாது. நடத்தையிலும் இருக்க வேண்டும்.

-மில்டன்

* மின்மினிப்பூச்சி பறக்கும்போதுதான்

பளபளக்கிறது. சுறுசுறுப்பாக இயங்கும்போதுதான் மனிதன் பிரகாசிக்கிறான்.

-பெய்லி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.