நாம் இதற்கு முன்பு ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் (வார்டு கவுன்சிலர்) என்ற பதவியைப் பற்றி அறிந்திருக்கிறோம். அதுபோன்ற ஏதாவது ஒரு ஊராட்சி ஒன்றிய வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றியத் தலைவராகப் போட்டியிடுவார். அதற்கும் இட ஒதுக்கீடு உண்டு. ஒரு ஊராட்சி ஒன்றியத் தொகுதி, குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டும் இட ஒதுக்கீட்டு அடிப்படையில் ஒதுக்கப்பட்டிருந்தால் அங்கு அந்த சமூகத்தைச் (ஆதி திராவிடர், பழங்குடியினர்) சேர்ந்தவர் மட்டும் போட்டியிட்டு ஊராட்சி ஒன்றியத் தலைவராக ஆக முடியும். அதுபோல சில இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும். அங்கு பெண்கள் மட்டுமே ஊராட்சி ஒன்றியத் தலைவராகப் போட்டியிட முடியும்.