திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

பழைய பாடல்: நிலவு

பள்ளியை விட்டு வந்தேனா? பட்டப் பகலும் மங்கினதா? உள்ளே வீட்டில் நுழைந்தேனா? உள்ள சுவடியை வைத்தேனா? பிள்ளைகள் எல்லாம் வந்தாரா? பெரிய தெருவில் சேர்ந்தோமா? வெள்ளி நிலாவும் வந்ததே! விளையா டும்படி சொன்னதே!

News image
Updated On :27 டிசம்பர் 2023, 6:15 pm

கண்ணம்மா பாரதி

பள்ளியை விட்டு வந்தேனா?

பட்டப் பகலும் மங்கினதா?

உள்ளே வீட்டில் நுழைந்தேனா?

உள்ள சுவடியை வைத்தேனா?

பிள்ளைகள் எல்லாம் வந்தாரா?

பெரிய தெருவில் சேர்ந்தோமா?

வெள்ளி நிலாவும் வந்ததே!

விளையா டும்படி சொன்னதே!

ஓடித் தொட்டோம் ஓர் ஆளை!

ஒளியும் ஆட்டம் ஆடினோம்!

பாடி நடந்தோம் எல்லோரும்!

பச்சைக் கொடிக்கு நீர்விட்டோம்!

தேடிக் கள்ளனைப் பிடித்தோம்!

சிட்டாய்ப் பறந்தோம் வீட்டுக்கே!

ஆடச் செய்தது வெண்ணிலா!

அழகைச் செய்தது வெண்ணிலா!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.