மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

இன்டக்ஷன் ஸ்டவ் பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டியவை...

இப்போது இன்டக்ஷன் ஸ்டவ் பாப்புலராகிவிட்டது.

News image

இன்டக்ஷன் ஸ்டவ்

Updated On :21 மார்ச் 2026, 10:30 pm

இன்டக்ஷன் ஸ்டவ்...

இப்போது இன்டக்ஷன் ஸ்டவ் பாப்புலராகிவிட்டது. அதைப் பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டிய சில டிப்ஸ்கள்...

இன்டக்ஷன் அடுப்பை ஆன் செய்ததும் பொதுவாக ஒரு டெம்ப்ரேச்சர் ஒளிரும். அதை அப்படியே வைத்துச் சமைக்கக்கூடாது. என்ன உணவுப்பொருள் சமைக்கப் போகிறோமோ அதற்குரிய பட்டனை உபயோகித்துச் சமைக்க வேண்டும் .

இன்டக்ஷன் அடுப்பில் வைத்துச் சமைப்பதற்கென்று பிரத்யேகமான பாத்திரங்கள் உள்ளன. இன்டக்ஷன் குக்கர், தோசை தவா கிடைக்கிறது. அதில் தோசை வார்த்தால் முறுகலாவும் மென்மையாகவும் இருக்கும்.

பொருளை வறுக்க வேண்டுமென்றால், தொடுதிரையில் அதற்கான ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவேண்டும். அந்தச் சமையலுக்குத் தேவையான வெப்ப சக்தி மற்றும் மணித்துளிகளானது அதன் உள்ளேயே தொகுக்கப்பட்டிருப்பதால், அதிகப்படியாகச் சமைக்கப்படுவதோ கருகி வீணாவதோ கிடையாது .

பால் காய்ச்சுவதற்கான ஆப்ஷனை செலக்ட் பண்ணி விட்டால் போதும், பால் காய்ந்து அடங்குமே தவிர பொங்காது.

உபயோகத்தில் இருக்கும் பொழுது அதைத் தொட்டுவிட்டாலோ அல்லது துணியால் அதன் மேல் கை பட்டாலோ எந்தவித பாதிப்பும் ஏற்படாது.

உபயோகித்து முடித்தவுடன் உடனடியாக சுவிட்சை அணைக்கக் கூடாது. சிறிது நேரம் கழித்துத்தான் மெயின் சுவிட்சை அணைக்க வேண்டும்.

இன்டக்ஷன் ஸ்டவ் சரியாக இயங்கவில்லை என்றால் நாமே சரி செய்யக்கூடாது. அதற்கென உள்ள சரிபார்ப்பவர்களை வரவழைத்துச் சரிபார்த்து விட்டுத்தான் சமைக்க வேண்டும்.

இது மின்சாரத்தோடு தொடர்பு உள்ளது என்பதால் கவனமாகப் பராமரிக்க வேண்டும்.

-ஆர்.ஜெயலட்சுமி, திருநெல்வேலி.

டிப்ஸ்... டிப்ஸ்...

இட்லி உப்புமா செய்யும்போது இரண்டு மணி நேரம் இட்லிகளை ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு எடுத்து சிறிது நேரத்துக்குப் பின் செய்தால் உப்புமா கட்டி தட்டாமல் இருக்கும்.

கறிவேப்பிலைத் துவையலுக்கு உளுந்தம் பருப்புக்கு ப்பதில் வேர்க்கடலையை வறுத்து அரையுங்கள். துவையல் மணமாகவும் சுவை மிகுந்தும் இருக்கும்.

இரவில் மிஞ்சிய பழைய சாதத்துடன் மைதா மாவைக் கலந்து மிக்ஸியில் அரைத்து நெய் விட்டு தோசை வார்த்தால் சுவை அபாரமாக இருக்கும்.

வீட்டில் செய்த வடகத்தில் பூச்சி வராமல் இருக்க, வடகம் வைத்திருக்கும் டப்பாவில் கொஞ்சம் மிளகாய் வற்றலைப் போட்டு வைத்தால் போதும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.