மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சரித்திரம் படைத்த மகளிர்...

ரஷியாவில் மிகவும் பிரபலமான ஆட்சியாளர்களில் ஒருவரான மகாராணி கேத்தரின், முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அரியணையில் இருந்தார்.

News image
Updated On :29 நவம்பர் 2025, 6:31 pm

ரஷியாவில் மிகவும் பிரபலமான ஆட்சியாளர்களில் ஒருவரான மகாராணி கேத்தரின், முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அரியணையில் இருந்தார். அவர் உலக வரலாற்றில் அதிசக்தி வாய்ந்த பெண் ஆட்சியாளராக விளங்கி னார்.

அந்தக் காலகட்டத்தில் உலகின் வலிமையான பேரரசுகளில் ஒன்றாக ரஷியா இருந்தது. நம்ப முடியாத அளவுக்குச் செல்வம் கொண்டிருந்தார். தங்கம், விலைமதிப்பற்ற பொக்கிஷங்களால் அலங்கரிக்கப்பட்ட பிரமாண்டமான அரண்மனைகளில் வசித்து வந்தார்.

சீனப் பேரரசை ஆட்சி செய்த ஒரே பெண்ணான பேரரசி வூ, உலக வரலாற்றில் மிகவும் பணக்காரப் பெண்மணியாகக் கருதப்படுகிறார். சீனாவில் டாங் வம்சம் ஆட்சியில் இருந்தபோது, இவர் ஆட்சி செய்தார். மிகவும் பரந்த, சக்தி வாய்ந்த ஒரு பேரரசை தனது கட்டுக்குள் வைத்திருந்தார். யாரிடமும் இல்லாத நகைகளை இவர் வைத்திருந்தார்.

மேலும், அவர் பிரமாண்டமான விழாக்களையும் நடத்தினார். பல நூற்றாண்டுகள் கழித்து இவர் இன்றும் நினைவு கூரப்படும் வகையில் மிகப் பெரிய அரசை உருவாக்கியவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.